பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சின்னங் தவிர்ந்தேன் நீறினை அணிந்து பார்த்தேன்; நெற்றியில் திருமண் ணிட்டோர் வேறெனப் பகைத்து நின்றேன்; விடுத்தபின் திருமண் வைத்தேன். நீறணிந் தோரை யெல்லாம் - நெடும்பகை யாகக் கொண்டேன்; *மாறிடும் இவற்றை இந்து மதமென ஏற்றுக் கொண்டேன். சிலுவையைத் தோளில் இட்டோர் சீறிடும் பகைவ ரானார்; குலவிய குல்லா வைத்தோர் கொடும்பகை யாகப் போனார்; நிலவிய நீறும் மண்ணும் நெற்றியில் அணிதல் விட்டேன் உலகினில் நல்ல சின்னம் ஒன்றை நான் தேடி நின்றேன். (*மாறிடும்-மாறுபாடுடைய) கவியாசர் முடியரசன் 0 13