பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாயிலுக்குட் புகுந்ததுமென் வாழ்வுதனை மறந்துவிட்டுக் கோயிலுக்குள் அரசனெனக் கோலோச்சி நானிருப்பேன்! தாயினுக்கு நிகராகத் தமிழுட்டி மாணவரைச் o சேயெனவே நான்புரந்த செயலெல்லாம் 事 நினைக்கின்றேன். சொல்லுக்குப் பொருளுரைப்பேன் சொக்கிடுவர்; கடிந்துரைக்கும் சொல்லுக்குப் பணிந்திருந்து சுடுசொல்லும் பொறுத்திருப்பர் மல்லுக்கு வர நினையா மாணவரைப் பெற்றிருந்தேன் இல்லுக்குள் ளிருந்தோய்வில் இவற்றையெலாம் நினைக்கின்றேன். பள்ளிக்குப் பவளவிழா! தேனாறு பாய்ந்ததுபோல் உள்ளுக்குள் நான்மகிழ்ந்தேன் ஒதிய அம் து. மொழிகேட்டு கள்ளுக்குள் மிதந்துவரும் கனிவண்டாய் நான் மிதந்தேன் அள்ளுற்ற தமிழமுதால் அகமகிழ்ந்து வாழ்த்துகிறேன். (மீ. சு. உயர்பள்ளிப் பவளவிழா வாழ்த்து) o *-- -- 20 D கெஞ்சிற் பூத்தவை