பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையிற் பிறந்த மகள் (திமிதக்கத்திருச்செங்கேர்ல விண்ணகத்து வான்வழியில் நடந்து வந்த மின்விழியன் இடிக்குரலன் முகிலன் என்பான், மண்ணகத்தே திமிர்ந்தெழுந்து நிமிர்ந்து நிற்கும் மலைமகளின் எழில்கண்டான் காதல் கொண்டான் பண்ணிசைக்குங் குயிலினங்கள் பாடி நிற்கப் பறந்துவரும் சுரும்பினங்கள் வாழ்த்தொலிக்கப் பெண்ண்வட்குக் கொழுநனென ஆகி விட்டான்; பின்னரவள் மெல்லுடலைத் தழுவி நின்றான். பலநிறத்துக் குலமலர்கள் விரிந்து நிற்கப் பையவரும் மென்காற்று மெய்யில் வீச, நலமிகுந்த மலைமகளோ தழுவி நின்ற நாயகன்றன் நெஞ்சத்தைக் குளிர்ச் செய்தாள்; கலவிக்குப் பின்முகிலன் துளிகள் சிந்தக் கருக்கொண்ட மலையரசி உயிர்த்து நின்றாள்; கலகலத்த குரலெழுப்பும் அருவி என்ற காதல்மக வீன்றெடுத்தாள் அந்த நங்கை. 46 D கெஞ்சிற் பூத்தவை