பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வான்மழையே வா! --

_ -- --- + - - - * H - வான்மழையே! வளங்களெல்லாம் வழங்குந்தாயே! வளர்கருணைக் கருமேனி வெள்ளை யாகி ஏன்மழையே பொழியாது வஞ்சித் தாய்நி? இருநிலத்துக் கலிபடர உளங்கொண் டாயோ? ஆன்முதலாம் உயிரினங்கள் கதறு கின்ற அகவலெலாம் படவிலையோ நினது காதில்? ஈன்வயிறு மக்களிடர் கண்டும் வாளா இருந்திடுமேல் மருட்பாடு தோன்று மன்றோ? நெடிலடியால் நீநடக்க வேண்டு கில்லோம் நிலஞ்சிரிக்க அவளடியால் நடந்தாற் போதும்; அடிகுறையுஞ் சிந்தடியால் கால்கு றைந்த குறளடியால் அடிபிறழ ஊர்ந்து வந்தால் படிவறளும் படியாகும்; பருவத் தேஇப் o படி நடந்தால் எப்படியில் வுலகம் உய்யும்? இடிதவழக் கொடிபடரும் மின்னல் பாய ஏரடிகள் நடைபயில வருவாய் இன்றே! (படிவறளும்- பூமி வறண்டு போகும். ஏர்- கலப்பை) 50 - கெஞ்சிற் பூத்தவை