பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[பாபர் 48-வது வயதிலும், பங்கிம் சந்திரர் 44-வது வயதிலும் காலமாயினர். காஞ்சிபுரம் பச்சையப்ப முதலியாரோ 40-வது வயதிலேயே காலமாகி விட்டார்.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரைப் போல் அவர் 90-வயது வரையிலோ, ஈரோட்டுப் பெரியாரைப்போல் 94-வயது வரையிலோ உயிரோடிருந்திருப்பாராயின் அவரால் நம் நாட்டுக்கு இன்னும் எத்தனையோ நன்மைகள் ஏற்பட்டிருக்கக் கூடும்.

நமது பச்சையப்பர் நாற்பதாண்டுகளே இவ்வுலகில் வாழ்ந்தவர் என்றாலும், அவர் நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் பெரும் புகழைப் பெற்றுவிட்டவர்.

அவர் மிகப்பெரும் பணக்காரர். அப்படி இருந்தும் பகட்டோ படாடோபமோ இன்றி எளிமையாகவே வாழ்ந்தார். அவரது முதல் திருமணம் மிகவும் எளிய முறையில் நடைபெற்றதாம்.

அவர் அவ்வப்பொழுது பலருக்கு எழுதிய கடிதங்களில், இரண்டொன்றைத் தவிர மற்றவை இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் 1794ஆம் ஆண்டு மார்ச்சு 22-ல் அவர் எழுதிவைத்த இந்த உயில் மட்டும் எப்படியோ கிடைத்திருக்கிறது.]

2050–2