பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(இனிய குரலும், நினைவாற்றலும் எல்லோருக் குமே அமைந்து விடுவதில்லை. இவ்விரண்டையும் கருவிலிருந்துதான் பெற முடியுமே யன்றித் தெருவி லிருந்து யாரும் பெற முடியாது.

பிளாட்டோ, ஜூலியஸ் சீசர், ஆசாகிரே, ஆல்வாய் எடிசன், மெக்காலே, மகமது துக்ளக், வின்ஸ்டன் சர்ச்சில், விவேகானந்தர், பைரன், பால கங்காதர திலகர், மயில்வாகனப் புலவர், மாம்பழக் கவிராயர் முதலியோர் வியக்கத்தக்க நினைவாற்ற லுடையவர்கள். அவர்களைப் போலவே நல்லூர் ஆறுமுக நாவலரும் அதிசயிக்கத்தக்க நினைவாற்ற அடையவர்.

இவர், துறவி ஆகாமலேயே ஒரு துறவியைப் போல் வாழ்ந்தவர். தமிழையும் சைவத்தையும் தம்மிரு கண்களாகக் கருதியும், பழந்தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தும், உரைநடையைப் புதுப் பித்தும், தம் சொந்தச் சிந்தனைகளைக் கொண்டே சொற்பொழிவாற்றியும் வந்தவர்.

இவர் முன்னிலையில் நின்றவர்கள் பலருண்டு. சொற்பொழிவில் இவரை வென்றவர்கள் யாரு மில்லை. -

ஆரம்பத்தில் குடித்தும் கூத்தடித்தும், அதற்கு பிறகு ஒழுக்கத்தோடு வாழ்ந்து, மக்கள்ால் “மகாத் மாக்கள் என்று மதிக்கப்பட்ட ஒரு சிலரைப் போலல்லாமல், இவர் ஆரம்பத்திலிருந்தே ஒவ் வொரு நாளும் ஒழுக்கத்தோடு வாழ்ந்த உத்தமர். ஆகவே, இவர் ஒரு செங்கதிரைப் போன்றவர். அவர்களோ, செந்தியைப் போன்றவர்கள்.

நெருப்பிலிருந்து தான் புகை வரும். நெருப்புச் சூரியனிலிருந்து புகையே வருவதில்ல்ை அல்லவா?)