பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமலிங்க அடிகள், பெரும்பாலும் பசித் திருந்தார்; அடிக்கடி தனித்திருந்தார்; வேண்டும் போதெல்லாம் விழித்திருந்தார்.

பசித்திருக்கையில், அவர் ஏழைகளின் பசியை உணர்ந்தார். தனித்திருக்கையில், அவர்தன்னையறிந் தி ன் ப மு ற் ரு ர். விழித்திருக்கையில், இனிய பாடல்கள் பலவற்றைப் பாடினர். .

இவரது பக்திப்பாடல்கள், தேவார திருவாசகத் தைக் காட்டிலும், கனிவிலும் முதிர்ச்சியிலும் இரக் கத்திலும் மிகச் சிறந்து விளங்கும் பாடல்களாகும்.

இவரது கடவுள் கருத்துக்கள், போகப் போகப் பயன் படாமற் போனலும் போகலாம், ஆனால் இவ ருடைய சன்மார்க்கச் சிந்தனைகள், எக்காலத்தும் எல்லோருக்கும் பயன்படும். -

கண் வழியாகவும், காது வழியாகவும், மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும், மயிர்க்கால் வழி யாகவும், ஆசனவாய் வழியாகவும் உயிர் நீங்கும் மெனச்சொல்லுவார்கள். ஞானிகளுக்குக் கபாலம் விண்டு உயிர் நீங்குமாம்.

வள்ளலார் மிகச் சிறந்த ஞானியாதலால், இவ ருயிர் கபாலம்விண்டுதான் நீங்கியிருக்க வேண்டும்.)