பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

இடியிடிப்பதைப் போலிருக்கிறது. இவர் பேசும்போது எங்கும் நிசப்தமாக விருக்கிறது. -

கனம்பொருந்திய காசிநாத் டிம்பக்திலாங்கு என்பவர் சுந்தர புருஷர். வாலிபராகினும் வித்தியா சாமர்த்தியமும் உன்னத பதவியையும் உடையவர். பிரபல பிரசங்கர். இவர் நாவாடினல் நாடெல்லாம் ஆடும். இவரது கொஞ்சு மொழி களைக் கேட்கக் கேட்கக் குயில்களும் கிளிகளும் வெட்கும். எப்போதும் சுருசுரு பரபர வென்றுஓடி நாடி வேலையைச் செய்து கொண்டேயிருக்கிரு.ர். இவர் சீக்கிரத்தில் இந்த இந்து தேசத்துக்கே ஒர் சிரோ பூஷணமாகப் பிரகாசிப்பா ரென்று சொல்லலாம்.

இவர்களன்றியில், கனம் பொருந்திய ரான்டெமல்பாரி, டாக்டர் ஆத்மராம் பண்டுரங்கு, சமஸ்கிருத பண்டிதர் இராமகிருஷ்ண ப ண் டார் க ர் முதலானவர்களுடைய பெருமையை யென்னென்று சொல்வோம். இப்படிப்பட்ட கனவான்கள்தான் எங்களுக்கு முன் சொன்ன மரியாதைகள் செய்வித்தனர். இவ்வித மரியாதைகள் எங்களுக்கு மாத்திர மல்ல, எங்களைப் போலவே இந்த இந்தியா தேசத்தின் பல விடங்களிலிருந்து வந்த பல ஜாதி, பல மத பிரதிநிதி களுக்கும் இவ்விதமாகவே மரியாதை செய்வித்தார்கள். இனி எங்களைவிட வேறு விடங்களிலிருந்து அங்கு வந்த பிரதி நிதிகள் யாவரெனில்:

குராச்சியிலிருந்து வந்த பிரதிநிதிகள் - ரீமான் டயராம் ஜதுமால் வக்கீல், பூரீமான் உடராம்மூல் வக்கீல்.

விரமகம் என்னும் பட்டணத்திலிருந்து வந்த பிரதிநிதி: மிஸ்டர் ஹரிலாம் மயராம், வக்கீலும் முனிசிபல் கமிஷ னரும்.

சூரத்திலிருந்து வந்த பிரதிநிதிகள்:-வக்கீலும் முனிசி பல் கமிஷனரும், பிரஜஹித் வர்த்தக சபையின் கமிட்டி