பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

காசியிலிருந்து வந்த பிரதிநிதி!-பென்ஷன் பெற்றுக் கொண்டு வேலையைவிட்டு நீங்கிய ஸ்ப்-ஜட்ஜி யாகிய மேஸ்தர் ராம்காலி செளத்ரி. . -

லக்னேலிலிருந்து வந்த பிரதிநிதிகள்:-ஹிந்துஸ்தானி பத்திரிகையின் சொந்தக்காரரான மேஸ்தர் முன்ஷி கங்கா பிரசாத் வர்மா, லார்டு கானிங் காலேஜ் உபாத்தியாயராக விருக்கும் மேஸ்தர் ப்ரனத் பண்டித்.

லாகோரிலிருந்து வந்த பிரதிநிதிகள்:-பாபு முந்திவி தார், பிளீடர் பாபு சத்தியானந்த், ஹக்னி ஒத்திரி பிராமோ

மிஷனரி. .

அலகாபாத்திலிருந்து வந்த பிரதிநிதி:-மேஸ்தர்கோசால்.

ஆமதபாத்திலிருந்து வந்த பிரதிநிதிகள்:-வக்கீலும் முனிசிபல் கமிஷனருமாகிய மேஸ்தர் கிஷாலால் மோடிலால், மேஸ்தர் மனேகஜிபி, மோடிவக்கீல் இன்னும் பல நாடுகளிலி ருந்து பலர் வந்திருந்தார்கள்.

டிசம்பர் மீ" 28 தேதி பகல் 12-மணிக்குக் காங்கிரெஸ் சபை கூட்டப்பட்டு, வங்காளத்திலிருந்து வந்த உமிஸ் சந்திர பனர்ஜி சபாநாயகராக நியமிக்கப்பட்டு, பின் வருகிற தீர்மானங்கள் செய்யப்பட்டன: அவையாவன.

1. இந்தியாவின் இராஜகீய காரியங்களை விசாரிக்கச் சீமையில் இராயல் கமிஷனை நியமிக்க வேண்டுமென்று கனம் சுப்பிரமணி.ஐயர் பிரேரேபிக்க, கனம் பெரோஜஷா மெட்டா ஆமோதிக்கச் சகலராலும் அங்கீகரித்துக்கொள்ளப் பட்டது.

2. சீர்மையிலிருக்கும் இந்தியா விசாரணைச் சங்கத்தை எடுத்துவிட வேண்டுமென்று பூரீ சிபலாங்கரால் பிரேரே பிக்க, பூரீ அநந்தாசார்லு அவர்களால் ஆமோதிக்கச் சகல. ராலும் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டது.