பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

சீவக சிந்தாமணிச் சண்டை"யின் வெற்றி தோல்விகளை நமக்கறிவிக்கும் நல்லதோர் இலக் கியச் செய்தியாகும்.)

முருகேச பிள்ளையின் வாத விளம்பரம்

'கும்பகோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதராகிய பூரீமத் சாமிநாதையரவர்களாவது, அவர்களுடைய மாளுக்கராகிய குடவாயில் பூரீமான் ஐ. சண்முகம் பிள்ளையாவது, அவர் களைச் சார்ந்த பிறராவது சீவக சிந்தாமணி வழுப்பிரகரணத் தால் காட்டிய பிழைகளைப் பிழைகளல்ல என்று தக்க நியா யத்தோடு அறிஞர்கள் பலர் கூடிய சபையில் திக்கரித்துக் காட்டுவார்களாகில், சிக்கி நாயக்கன் பேட்டை இராகவாச் சாரியர் அவர்களும் தமது நியாய வாதா பாச நிராகரணத் தில் தாம் ஒப்புக்கொண்டு காட்டிய நியாயங்களையும் ஓர் ஆக்ஷேபத்துக்குமிடமின்றி அச்சபையில் தக்க நியாயத்தோடு தாபித்துக் காட்டச் சித்தமாயிருக்கின்ருர்,

சீவக சிந்தாமணிப் பதிப்பிற் காட்டிய பிழைகளைப் பிழைகளென்றே யாம் ஒத்துக்கொண்டோம். இராகவாச் சாரியரே நியாய வாதா பாச நிராகரண நிறுப்புச் செய் திடுக” என்னினும் தக்கவர்கள் முன்னிலையில் அவ்வாறு செய் தலும் அவருக்குச் சம்மதிதான். ஆதலால் அபிப்பிராயத் தோடு பொது இடமும் நாளும் குறிக்க.”

சர்வதாரி * - - ஐப்பசி తా i இங்ங்னம், காஞ்சீபுரம், 1888 பூ. முருகேச பிள்ளை.

(சந்திரபானு அச்சுக்கூடம்.)