பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

நாயகர் கோர்ட்டில் வந்த பிறகு, அழகிய மண வாள ராமாநச ஏகாங்கி சுவாமிகளுக்கும், சாட்சி சம்மன் கொடுப்பித்தார்கள். சில சைவ, வைண வர்களும் வந்திருந்தார்கள்.

மாஜிஸ்ட்டிரேட், நாயகரவர்களை நோக்கி சமாதானமாகப் போகிறதாய்ச் சொன்னீரே! இன்னும் சமாதானமாகவில்லையா? இதற்குத்தான நீர் எனக்கு அர்த்தம் தனியாய்ச் சொல்லிவைத் தீர். புத்தகத்தில் நீர் எழுதினதே தவறு, ஒருமணி நேரத்திற்குள் சமாதானம் ஆகாவிட்டால் கேஸ் விசாரிக்கப்படும்” எனக் கூறவே, அங்கு ஒரு தனி யறையில் அட்டர்ணிகள் இருவரும், நாயகரவர்களே யும், நாவலவர்களையும் அழைப்பித்து, நாயகரிடம் மன்னிப்புப் பத்திரம் வாங்கி மாஜிஸ்ட்ரேட் அவர் களிடம் கொடுக்க, அவர் நாயகரைப் பார்த்து *நீர் மன்னிப்புப் பத்திரம் எழுதிக் கொடுத்த தாலும் நாவலர் ஒப்புக் கொண்டதாலும் வழக்கை விசாரிக்கவில்லை. இனிமேல் நீர் இவ்விதம் எழுதக் கூடாது, எச்சரிக்கையாய் இரும்.’’ என்று அச் சுறுத்தி அனுப்பினராம்.)

சூளை சோமசுந்தர நாயகரின் மன்னிப்புக் கடிதம்

MADRAS, 8th JANUARY 1891. ஏ. வே இராமாநுஜ நாவலரவர்களுக்கு

ஐயா,

சென்னப்பட்டணம் டவுன் பிரசிடென்ட் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் தாங்கள் என்பேரில் கொண்டுவந்த 1890 u

காலண்டர் 22349-வது நெ. பிரியாதில் நான் அச்சிட்டுப் பிர சுரஞ் செய்த பாஞ்சராத்திர மத சபேடிகை அல்லது சைவ