பக்கம்:நெஞ்சில் நிறுத்துங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

பம்பாய் பிரீபிரஸ் ஜர்னலின் ஆசிரியராயிருந்து மிகத் திறமையாக நடத்திப் பெயர் பெற்றவரும், பம்பாய் காங் கிரஸ் இயக்கத்தை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஒருவருட தண்டனை யடைந்தவருமான நண்பர் கே. சீனி வாசன் சென்ற மாதம் 22வ. நாசிக் சிறையிலிருந்து விடுதலை யடைந்து விட்டார்.

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டு மென்று ஆர்வங்கொண்ட தமிழ் மணிகளில் அவர் ஒருவர். அவர் ஜெயிலுக்குப் போகுமுன்பே, விடுதலையடைந்ததும் இந்தத் துறையில் வேலை செய்யவேண்டுமென்று கடலூர் ஜெயிலில் என்னைக் கண்டு சொல்லிப்போர்ை. அந்த மாதி ரியே இப்பொழுது செய்ய விரும்புவதாக டெல்லியிலிருந் து கடிதம் எழுதியிருக்கிருர். இதைத் தமிழ்நாட்டின் அதிர்ஷ் டம் என்று கருதுகிறேன்.

நண்பர் வ. ராமசாமி ஐயங்கார் பகலிலும் இரவிலும் இலக்கியத்தைப் பற்றியே பேசுகிரு.ர். சுவாசம் விடும் போதும் இலக்கியந்தான். இலக்கிய சுவாசத்தையே ஜீவனு கக் கருதித் துள்ளி ஒடுகிரு.ர். சென்னையில் அவர் வந்து இருந்துகொண்டு வாலிபத் தமிழருக்கு இலக்கிய இஞ்சக் ஷன்” செய்த வண்ண்மா யிருக்கிரு.ர். சீனிவாசன் வரவும், ஐயங்கார் "இஞ்சக்ஷனும் இலக்கிய சூரியன் உதயமாகும் அறிகுறிகளோ என்று ஆனந்த மடைகிறேன். தமிழரே, இதுவரை தூங்கியது போதும். இனியாவது விழியுங்கள். மற்ற பாஷைகள் எவ்வளவு முன்னேற்ற மடைந்திருக்கின் றன என்பதைச் சிந்தியுங்கள்.

சீக்கிரமாகத் தமிழ்வளர்ச்சியில் சிரத்தை கொண்டவர் கள் கூடி யோசித்து, தீவிரமாக வேலை ஆரம்பிக்க முயற்சி நடக்கிறது. கடலூர் ஜெயிலில் கையெழுத்திட்ட நண்பர் களும், ஆவல்கொண்ட மற்றவர்களும் உடனே தங்கள் அபிப் பிராயங்களே எனக்கு எழுதும்படி பணிவுடன் வேண்டிக் கொள்ளுகிறேன்.

டி. எஸ். சொக்கலிங்கம்.

(9–7–1933)