பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர், மாலையிலே கூட்டத்தில் பேசுகிறார். பிற்பகலிலேயே வந்து விட்டார். அவரைக் காண வேண்டுமென்று நானும் சில தொண்டர் களும் சென்றோம். அவரைப் பார்த்த மாத்திரத்தில் எனக்கு அவர் மேல் ஒரு வெறுப்புத்தான் ஏற்பட்டது. காரணம், அவ்வளவு ஆடம்பரமாக அவர் காட்சியளித்தார். கழுத்தில் தங்கச் சங்கிலி. கையில் தங்க முலாம் பூசிய கடிகாரம். ஆடம்பரமான நடையுடை பாவனைகள். இவர், தொண்டுள்ளம் கொண்டவரல்ல என்ற முடிவுக்கு அப்போதே வந்து விட்டேன். அவரும் விரைவில் கட்சியை விட்டுப் போய் விட்டார். எளிமையும், இனிய சுபாவமும் பண்பும் கொண்ட தலைமைதான் ஓர் இயக்கத்திற்குத் தேவை என்ற உணர்வு எனக்கு அப்போதே ஏற்பட்டது. அந்த எண்ணத்தை நிறைவு செய்த அண்ணாதான் எனக்கு அரசியல் தலைவர் ஆனார். தொண்டர்களிடம் அவர் காட்டிய கனிவுதான் அவரை உயர்த் தியது. தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. கூட்டத்திற்குச் செல்கிற ஒரு சில பேச்சாளர்கள் தொண்டர்களைத் தங்கள் ஏவலாளராக மதித்து நடத்துவதையும் நான் திராவிடர் கழகத்தில் இருந்தபோதே பொறுத்துக்கொண்ட தில்லை. ஏதோ வானத்தில் இருந்து குதித்த அதிமேதாவிகளைப் போலத் தங்களை கருதிக்கொண்டு தொண்டர்களின் உள்ளங்களைப் புண்படுத்து. கிறவர்களைப் பெரியாரும் ஆதரித்ததில்லை; அண்ணாவும் ஆதரித்த தில்லை. அந்த மோதவிகளின் எரிச்சலையும், "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்ற பேச்சுக்களையும் பொருட்படுத்தாமல் எறும்பு போலப் பணியாற்றிக் கழகத்தை வளர்த்த கண்மணிகளில் முதன்மையானவர் தோழர் கே.வி.கே. சாமி. அரிவாளுக்கும், கட்டாரிகளுக்கும் மத்தியில் அரசியல் களம் அமைத்து அண்ணாவின் வழியில் அறப் போர் புரிந்த அன்புத் தொண்டர் அவர். 160