பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு.கழக திருச்சி திருச்சி நகரவீதிகளிலே அண்ணா அவர்கள் கைத்தறி ஆடைகளை விற்றதுபோல், கழக முன்னணியினர் அனைவரும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களிலும், சிற்றூர்களிலும் கைத்தறி மூட்டைகளைத் தலையிலும், தோளிலும், முதுகிலும் சுமந்து தெருத் தெருவாக விற்றனர். . 'செந்தமிழ் நாட்டுக் கைத்தறி நெசவுச் சேலைகள், வேட்டிகள் வாங்குவீர்; நம் திராவிட நாட்டினர் சேமம் வேண்டிச் சிங்கார ஆடைகள் வாங்குவீர்!" என்ற உடுமலை நாராயணக் கவியின் பாடலை முழக்கியவாறு கழகத்தினர் ஒரு நாள் அடையாள பூர்வமாகக் கைத்தறி ஆடைகளை விற்றனர். அப்படி விற்ற மொத்தத் தொகை ஒரே நாளில் ஒருலட்சம் ரூபாய்! சென்னையில் நான் விற்பனையை மேற்கொண்டேன். இருபதாயிரம் ரூபாய்க்கு விற்பனையாயிற்று. சந்தை இல்லாமல் தேங்கிக் கிடந்த கைத்தறி ஆடைகள், அந்த ஒரு நாள், கழகத்தினர் செய்த பிரச்சார முயற்சியின் காரணமாக சுறுசுறுப்புடன் சந்தையைப் பிடித்துக்கொண்டன. நெசவாளர்களின் கண்ணீர் துடைக்கப்பட்டது. கழகத்தினர் அனைவரும் கைத்தறித் துணிகள்தான் அணிய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்குப் பிறகு கைத்தறிக்குப் புதிய செல்வாக்கே உதயமாயிற்று. கழகத்தின் இரு வண்ணக் கொடி போட்ட வேட்டிகளும், சேலைகளும் இன்று ஆயிரக் கணக்கில் விற்பனையாவதற்கும், நாடெங்கும் கைத்தறியின்மீது புது மோகம் ஏற்படுவதற்கும் கழகத்தினர் செயல்தான் காரணம் என்பதை நெசவாளர்கள் மறக்கவே மாட்டார்கள். நெசவாளர்களின் துயர் துடைத்ததைத் தஞ்சையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் துயர் துடைக்கும் பணியைத் தி.மு. கழகம் ஏற்றுக் கொண்டது. தஞ்சையில் வீசிய புயல், கடற்கரை யோரத்தில் நாகை, வேதாரண்யம் போன்ற இடங்களில் பெரும் சேதத்தை விளைவித்து இருந்தது. மீனவப் பெருமக்கள் பெருத்த இழப்புக்கு ஆளாகியிருந்தனர். உடுப்பதற்கு உடையுமின்றித் 171