பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாகின்றன. அதுபோக மீதியை அரசுத் துறை சம்பந்தப்பட்ட மற்ற நிறுவனங்களும் பயன்படுத்துகின்றன. கோவையில் உள்ள சிறையில் பெட்ஷீட்டுகளும், வார்டர்கள், காவல் துறையினர் முதலியவர்களுக்கு உடுப்புத் துணிகளும் தயார் செய்யப்பட்டு, எல்லாச் சிறைச்சாலைகளுக்கும், மீதி அரசாங்க அலுவலர்களுக்கும் உபயோகமாகின்றன. வேலூரில் தயாரிக்கப்படும் செருப்புகள், பூட்ஸ்களும் அரசாங்க அலுவலர்களுக்கும் எல்லாச் சிறைச்சாலைகட்கும் உபயோகமாகின்றன. ராஜமகேந்திரபுரம் சிறைச் சாலையில் நல்ல கம்பளிகள் தயாரிக்கப்படுகின்றன. இப்படி முக்கியத் தொழில்களும், சில்லறைத் தொழில்களும் சிறைக் கைதிகளாலேயே செய்யப்படுகின்றன. சர்க்கார் அலுவலகங் களில் இருக்கின்ற மரச் சாமான்கள் பல, கைதிகள் சிறைகளில் தயாரித்தவை. சென்னைச் சிறையில் அச்சகம் அமைக்கப்பட்டு- எல்லாச் சிறைகளுக்கும் தேவையான அச்சு வசதிகள் கவனிக்கப்படுகின்றன. செய்ய தண்டனை பெற்று வந்துள்ள கைதிகள் உழைக்காமல் இருக்கவே முடியாது. தோட்டி வேலைகளையும் அவர்களில் சிலரே வேண்டும். கூட்டும் கேங்' என்ற குழு, கைதிகள் நிறைந்ததாயிருக்கும். அவர்கள் சிறைச்சாலை முழுவதையும் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்க வேண்டும். குப்பையில்லாவிட்டாலும், கூட்ட வேண்டும்! அதற்குத்தான் 'ஜெயில் வேலை' என்று பெயர். பாதைகளில் முளைத்திருக்கும் புற்களையெல்லாம் அகற்றும்படி உத்தரவிடுவார்கள். மண்வெட்டி கொண்டு விரைவில் செதுக்கியும் விடலாம். செதுக்கிவிட்டால் - பிறகு வேலையிருக்காதே? அதற்காகப் புல்லைப் பிடுங்கச் சொல்வார்கள். அவர்களும் மிகவும் சுறுசுறுப்பாக(!) ஆளுக்கொரு நுனிப் புல்லாகப் பிடுங்குவார்கள். அந்தப் புல் வளரும்- அவர்கட்கும் வேலையிருக்கும்! இதற்கும் 'ஜெயில் வேலை' என்று . தான் பெயர். சிறை நிர்வாகத்தை நடத்துவதற்காக முக்கிய அதிகாரிகளும், கைதிகளைக் கண்காணிப்பதற்காக வார்டர்களும் இருக்கிறார்கள். மற்ற எல்லா வேலைகளையும் கைதிகளே செய்கிறார்கள். சிறையில் குற்றம் செய்யும் கைதிகள், சிறை அதிகாரிகளால் தண்டிக்கப்படுகிறார்கள். கால்விலங்கு பூட்டுதல், கைவிலங்கு பூட்டுதல், நிலவிலங்கு மாட்டி வெயிலில் நிற்க வைத்தல் போன்ற கொடிய தண்டனைகளும் கைதிகளுக்கு அளிக்கப்படுமாம். முன்பு! 228