பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் காஞ்சிபுரம் சாலை நிகழ்ச்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக் கிறோம் நாம் என்றுதான் ஒரு கணம் தோன்றியது. பிறகு அடிபட்ட பையனை விழுப்புரம் மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றோம் தேவையான சிகிச்சைகள் அளித்து அவனைக் காப்பாற்றிவிட்டோம். வண்டிக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் ஈடு செய்தோம். விழுப்புரத்தில் உள்ள டாக்டர் தியாகராஜன் அந்தச் சம்பவத்தில் எனக்கு நிறைய உதவி செய்தார். ஏற்கெனவே அவரை எனக்கு நன்றாகத் தெரியும். விழுப்புரத்திற்கு அருகிலேயே தான் விபத்து ஏற்பட்டதால் பையனைத் தூக்கிக் கொண்டு வந்து, மருத்துவ மனையில் சேர்த்து விட்டு அவனுக்குக் காவலாகச் செல்லமுத்துவை வைத்துவிட்டு நான் டாக்டர் தியாகராஜன் வீட்டைத் தேடிக் கொண்டு சென்றேன். அவர் முன்பிருந்த வீட்டில் இல்லையென்றும், வேறு எங்கேயோ குடி போய்விட்டதாகவும் . சொன்னார்கள். என்னுடைய உடைகளடங்கிய பெட்டி மாத்திரம் என் கையில் இருந்தது. ஒரு வண்டி பிடித்துக் கொண்டு அவர் வீட்டிற்குப் போகலாமென்றால், அந்த நேரத்தில் எந்த வண்டியும் கிடைக்கவில்லை. பெட்டியைத் தலையிலே வைத்துக் கொண்டு நடந்தே விழுப்புரத்தில் பல தெருக்களைச் சுற்றிக் கடைசியாக டாக்டர் தியாகராஜன் வீட்டைக் கண்டுபிடித்தேன். அதற்குப் பிறகு அவர் சிரமம் எடுத்துக்கொண்டு நான் சேலம் போவதற்கு வசதிகள் செய்து கொடுத்தார். இன்னொரு முறை நானும், கருணானந்தமும், சிவாஜிகணேசனும் காஞ்சிபுரம் சென்று அண்ணாவைப் பார்த்துவிட்டுச் சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறோம். அப்பொழுதுதான் 'பராசக்தி' படம் எடுக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வரும் வழியில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. காரின் வெளிச்சம் வேறு மங்கலாகி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகே வந்து கொண்டிருக்கும் பொழுது அந்தப் பகுதியில் ஒரு பாலம்வேலை நடை பெற்றுக் கொண்டிருந்ததால், மாற்று வழிக்குக் குறிப்புப் பலகை வைத்து சிவப்புத் துணி கட்டியிருந்தார்கள். விளக்கு வெளிச்சம் போதாததால் கார் டிரைவர் அதைக் கவனிக்காமல் மாற்று வழியில் செல்வதற்குப் பதிலாக நேராகச் சென்று விட்டார். உடனே நண்பர் கணேசன் கூச்சல் போடவே கார் டிரைவர் திடீரென்று பிரேக்கை அழுத்திவிட்டார். பிரேக் போடப்பட்ட வேகத்தில் மழைத் தண்ணீர் தேங்கியிருந்த சாலையில் காரின் சக்கரங்கள் வழுக்கி, ஒரு சுற்றுச் சுற்றி நின்றது. கார் எப்படியிருக்கிறது என்பதைக் காருக்குள்ளிருந்த நாங்கள் கவனித்தோம். கார் சக்கரம் ஓர் அங்குலம் நகர்ந்தால், நாங்கள் 272