பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 காரைக் கைது செய்த காவலர்கள் எது து எப்படியானாலும் தடை செய்யப்பட்ட கூட்டத்தில் 3-ஆம் தேதி கலந்துகொண்டு பேசுவது என்று அறிஞர் அண்ணா அவர்களே தீர்மானித்ததைக் கேட்டுத் தமிழகமே சிலிர்த்து எழுந்தது. 'அண்ணா பேசும் கூட்டத்திற்கா தடை! அமைதி காக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிக்கா தடை?' என்று தமிழகத்தின் ஒவ்வொரு உள்ள மும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டது. தில் அண்ணா அவர்கள் மட்டுமே பேசுவதாக இருந்த அந்தக் கூட்டத் தடை,"விதிக்கப்பட்ட நிலைமையின் காரணமாகத் தோழர்கள் சம்பத், ஆசைத்தம்பி, இரா. செழியன் ஆகியோர் தம்முடன் பேசட்டும் என்று அண்ணா அவர்கள் முடிவு செய்து, அதற்கேற்ப அறிக்கையும் விடுத்தார்கள். ஒருக்கால் இவர்கள் கைது செய்யப்பட்டால், அடுத்து நான் கூட்டத்தில் பேசுவதாகவும் ஏற்பாடாயிற்று. 3-ஆம் தேதி காலை முதலே கடற்கரையில் மக்கள் அனுமதிக்கப் படாமல், வெறும் போலீஸ் மயமாகக் காட்சியளித்தது. பிற்பகலில் கடற்கரைக்குச் செல்லும் பாதைகளும் அடைக்கப்பட்டன. பிற்பகலி லிருந்தே கடற்கரை நோக்கிப் போகத் துடித்த மக்களுக்கும் போலீசா ருக்கும் ஆங்காங்கு தகராறுகள் மூண்டன. பைகிராப்ட்ஸ் சாலையில் ஓரிரு முறை கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும் கடற்கரைக்குப் போக விருந்த மக்களைக் கலைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் போலீஸ் ஆளாயிற்று. சரியாக 5.30 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்களும், அவருடன் பேசுவதாக இருந்த மற்ற மூவரும் கழகக் கொடி பறக்க விடப்பட்ட காரில் கடற்கரை நோக்கிச் சென்றனர். அந்தக் காருக்குப் பின்னால் நான் தனிக் காரிலும், நாவலர், என். வி.என்., பேராசிரியர் அன்பழகன், மதியழகன், அண்ணன் சி. பி. சி., மதுரை முத்து, அன்பில் ஆகியோர் தனித் தனிக் கார்களிலும் பின்தொடர்ந்தோம். ஜெனரல் ஆஸ்பத்திரி சந்திப்பில் அண்ணா அவர்களும் அவருடன் சென்ற மூவரும் போலீசாரால் கைது செய்யப் பட்டனா. அதற்கு அடுத்துச் சென்ற காரிலிருந்த நானும், என் னுடன் வந்த தோழர்கள் இரா. தருமலிங்கம், பண்ணை முத்துக் கிருஷ்ணன், அரங்கண்ணல், அன்பில் தருமலிங்கம், சண்முக வடிவேல் கியோரும், காரோட்டி ரங்கசாமியும், காரோடு கைது செய்யப் 340