பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நீதிக் கட்சியில் பல மாற்றங்கள் 1932-ல் நீதிக் கட்சித் தலைவர் முனுசாமி நாயுடு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் தொடர் பாகத் தஞ்சையில் கூடிய மாநாட்டில் பொப்பிலி அரசர் கட்சியின் தலைவராகவும் முறைப்படி முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். மூன்று ஆண்டுக் காலமே இந்த மந்திரி சபை நடைபெற வேண்டுமெனினும் சைமன் கமிஷனுடைய அறிக்கைவெளிவரக் காலம் தாழ்ந்ததால் இந்த மந்திரி சபையின் உயிர் ஏழு ஆண்டுகள் நீடித்தது. அந்தக் காலத்தில்தான் செட்டி நாட்டரசர் முத்தையா செட்டியாரும் தஞ்சைத் தங்கம், தமிழ்ச் சிங்கம். சர் ஏ.டி. பன்னீர் செல்வமும் இடையே அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். 1936-ல் சைமன் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின்படி ஏற்பட்ட சீர்திருத்தத்தின்படி நடந்த பொதுத் தேர்தலில் நீதிக்கட்சி அடியோடு வீழ்ச்சி யடைந்து விட்டது. அந்த ஆண்டில் தான் நான் ஐந்தாம்' வகுப்பில் உயர்நிலைப் பள்ளியில் பனகல் அரசருடைய வரலாற்றைத் தலைகீழ்ப் பாடம் செய்து ஆசிரியரின் பாராட்டைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன். 1937-ல்தான் காங்கிரஸ் மந்திரிசபை முதன் முதலாகச் சென்னை மாநிலத்தில் பதவி ஏற்றுக் கொண்டது. இந்தப் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி நேரிடையாகப் பங்கு கொண்டதால் சுயராஜ்யக் கட்சி மறைந்து ஒழிந்தது. காங்கிரஸ் அமைச்சரவை ராஜாஜி அவர்களை முதல்வராகக் கொண்டு அமைக்கப்பட்டது. ராஜாஜி தமிழக முதல்வரானதும் இந்தியைப் பள்ளிக்கூடங்களில் கட்டாயப் பாடமாக்கினார். 'இந்திகட்டாயம்' என்று சட்டம் பிறந்தவுடன் அதனை முன்னாலே அறிந்து எதிர்ப்புணர்ச்சியைக் காட்டி வர் தமிழ்ப் பற்றுடையோரும் புலவர் பெருமக்களும் வீறிட்டெழுந்தன ளர்ச்சிகள் நடத்தினர். இந்தி வேண்டாமென்று முடிவுகள் எடுத்து அரசுக்கு அனுப்பினர். செந்தீயென எழும் தங்கள் கண்டனங்களைச் செய்தித் தாள்களின் வாயிலாக வெளியிட்டுக் குவித்தனர். தமிழகத்தின் நகரங்கள், பட்டிதொட்டிகள், சிற்றூர்கள் எங்கணும் இந்தி எதிர்ப்புக் 38