பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/500

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எத்தனை நாள் கடுமையாக, அடக்கு முறைகளைத் -தடை உத்தரவு களை - அன்றைய ஆட்சியாளர்கள் அவிழ்த்து விட்ட போதிலும், இந்தி எதிர்ப்புப் பொது மாநாட்டிலே எடுக்கப்பட்ட முடிவுகளை நிறைவேற்று வதில் தி.மு. கழகம் பின் வாங்கிடவே இல்லை. பேராசிரியர் அன்பழகன், மதியழகன் முதலானோர் தலைமையில் மறியல் போர் தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்தது; சிறை நோக்கிச் சென்ற வண்ணம் இருந்தனர் கழகத் தோழர்கள். ஆட்சி மொழி பற்றிய அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவினை எரித்தி டுவதற்கு முதற்களமாகச் சென்னை நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லவா? அதைப் போலவே இரண்டாங்களமாக இடம் பெற்ற நகரம் மதுரை. அங்கே 16-12-63-இல் சட்டப்பிரிவினுக்குத் தீ மூட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த அறப்போர் நிகழ்ச்சிக்குப் பார்வை யாளராகத் தலைமைக் கழகத்தின் சார்பில் பொருளாளர் பொருளாளர் என்கிற முறையில் நான் போனேன். மதுரைக்கு ஐம்பது மைல் தொலைவுக்கு இப்பால் சென்றிடும் பொழுதே எங்களைச் சூழ்ந்து கொண்டது ஒரு சோதனை. நாங்கள் பயணம் புரிந்து கொண்டிருந்த கார் 'படுக்காளி மாடு' போலப் படுத்துக் கொண்டு விட்டது திடீரென்று. காரணம், அதன் மூன்று சக்கரங்களுமே பழுதடைந்து விட்டன பரிதாபமாக! காருக்கு ஏற்பட்டு விட்ட கதியினை நினைத்துக் கையைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது நின்றிருந்தோம் நானும், மன்னை முதலிய நண்பர்களும். தீ மூட்டும் நிகழ்ச்சிக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏகிட முடியவில்லையே என்கிற ஏக்கம் எங்களுக்கு. அப்போது, ஒரு கார் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது என்னைக் கண்டதும் அது நின்றுவிட்டது. “எங்கே செல்கிறீர்கள்?” என்று காரில் இருந்தவர் கேப்டார். "மதுரையிலே நடைபெறும் சட்ட எரிப்பு நிகழ்ச்சியைப்பார்க்க வந்தோம்; வழியில் கார் கெட்டுவிட்டது" என்று நிலைமையை விளக்கி னோம். சரி; என் காரில் ஏறுங்கள்; நான் கொண்டு போய் மதுரையில் விட்டுவிடுகிறேன்" என்றார் அவர். எங்கள் உற்சாகத்திற்குக் கேட்டிட வேண்டுமா? உடனே அவரு டைய காரில் ஏறிக் கொண்டோம். நாங்கள் மதுரை மாநகரை அடை வதற்கும் மதுரை முத்து குழுவினர் சட்டத்தை எரித்திடப் புறப்படுவ தற்கும் சரியாக இருந்தது. 494