பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/515

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல்லாட்சியோ எல்லாவற்றையும் விட மிடுக்கானது ; இழிதகை மையை-ஈனச் செயல்களை - மிதித்துத் துவட்டக்கூடியது கொலை வாளினை எடடா-மிகு கொடியோர் செயல் அறவே!" -என்பன போன்ற புரட்சி தெறித்திடும் வரிகளை இன்னொருவரால் புனைந்திடத்தான் முடியுமா? "சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு. தேக்கிய நல் வாய்க்காலும் வகைப் படுத்தி நெற்சேர உழுதுழுது பயன் விளைத்த நிறையுழைப்புத் தோள்களெல்லாம் எவரின் தோள் கள்?”- எனக் கேட்டு, "காண்ப தெல்லாம் தொழிலாளி செய்தான்-அவன் காணத் தகுந்தது வறுமையா? பூணத் தகுந்தது பொறுமையா? என்றெல்லாம் தொழிலாளர் தோழராய் உரத்த குரல் எழுப்பிச் சமதர்மப் பூங்காவை சமைத்திட அவர் துடித்த துடிப்பினை யாரே மறுத்திட முடியும்? "தட்டுப்படாதபெரும் பொருட்கொரு சாதியும் உண்டோடா!-படுவாய் சாதியும் உண்டோடா! மட்டற்ற செம்பொருட்கே- முரண்படும் மதங்கள் உண்டோடா!” என்று சாதிச்சழக்குகளைச்-சாத்திரச் சடங்குகளை-ஆத்திரத்துடன் சாடிய ஆண்மையாளர்- அரிமாவும்-அவரே! "கோரிக்கை யற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரில் பழுத்த பலா!-மிகக் கொடியதென் றெண்ணிடப்பட்ட தண்ணே குளிர் வடிகின்ற வட்ட நிலா!" என்று பெண்டிர்க்காகக் தாயுமாவார் அவர்! கண்ணீர் வடித்திட்ட பேரன்புத் 509