பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/558

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 'காராக்கிரகம் விழுங்கிற்று எங்களை பேரறிஞர் அண்ணா, 25-1-65 நள்ளிரவில் கைது செய்யப் பட்டார். குளித்தலையில் கூட்டத்தை முடித்துக் கொண்டு கோவை. நாக்கிக் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்ளப் பயணம் செய்துக் கொண்டிருந்த என்னை இரவு ஒரு மணி அளவில் பசுபதிபாளையத்தில் வழியிலே வந்து வளைத்துக் கொண்டனர் காவல் துறையினர். மற்ற கழக முன்னணியினருக்கும் பரிசாகக் காத்திருந்தது சிறைவாசம். தங்கத் தமிழகம் கொந்தளிக்கும் கடலாகவே மாறிக் கொண்டி ருந்தது. மாணவ மணிகள் இன்றைய இளஞ்செடிகள்; நாளையப் பழ மரங்கள். இந்தி ஏகாதிபத்தியமோ அந்தச் செடிகள் பல தீய்ந்திடவும்-மாய்ந் திடவும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிற்று கொடூரமாக! உடல் வளத்திற்கு ஊட்டச் சத்து போல-மனவளத்திற்குக் குண லத்திற்கு -உரமாய் அமைந்ததே கல்வி. அந்தக் கல்வித் தேனைப் பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய மலர்களிலி ருந்து திரட்டிச் சேமித்துக் கொள்வதே உயிர் மூச்சாய் ஒரே குறிக் கோளாய் - அமைந்திட வேண்டும் மாணவ மணிகளுக்கு. எனினும், அந்தக் கல்வியிலேயே கலப்படம் நிகழ்ந்திடும் பொழுது - நஞ்சே கலக்கப்படும் பொழுது - தாய்மொழிக்குரிய தனி இடமே தகர்க்கப்படும்பொழுது--மாணவர்களால் எப்படி இருந்திட முடியும் மவுனமாக? தனிப்பட்ட சச்சரவுகளுக்காகவும், தங்களுக்குள்ளேயே வெடித் திடும் கோப தாபங்களுக்காகவும், தேவையற்ற முறையில் கிளர்ச்சிகளிலே ஈடுபட்டு மாணவர்கள் படிப்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள் என்றால், அது தவறானதுதான்- தவிர்க்கப்படவும் வேண்டியதுதான். ஆனால் ஒரு நாட்டின் விடுதலை, மொழியுரிமை, இனநலன் முதலான பொது இலட்சியங்களை ஊனப்படுத்திட -அவற்றின் உருவையே சிதைத்திட-சில தீய சக்திகள் முற்படும் பொழுது, பொது 552