பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாளையங்கோட்டைச் சிறையில் இருந்தபோது சாதாரணமான ஒரு பாதுகாப்புக் கைதிக்குக் கிடைத்திருக்கக்கூடிய அந்தப் பணியாள் வசதி கூட எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் நான் இருந்த இடம் 'பார்ஸ்டல் சிறை-என அழைக்கப்படும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி. அங்கு பெரிய கைதிகள் இல்லை. இளந்தளிர் மாணவர்களே இருந்தனர். எனவே, அவர்களில் யாரையும் பணியாளாக அனுப்ப - முடியவில்லை அதிகாரிகளால். பாளையங்கோட்டை சப்-ஜெயிலிலிருந்துதான் யாரை யாவது வரவழைத்திட வேண்டும். அதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டும், நான் அந்தச் சிறையை விட்டுச் சென்னைக்கு வரும்வரை அது நிறைவேறிடவே இல்லை. அன்றைய பக்தவத்சலனார் அரசு, பாதுகாப்புச் சட்டத்தை என் மீது பாயவிடுவதில் எடுத்துக்கொண்ட அவசரத்தை - அக்கறையை-ஒரு பாதுகாப்புக் கைதிக்குத் தந்திட வேண்டிய சாதாரணச் சலுகைகளை வழங்குவதில் கூடச் செலுத்திடவில்லை என்பதைச் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே இத்தனையும் எடுத்துக் காட்டிட விழைந்தேனேயல் லாமல், வேறல்ல. எனக்குப் பணியாள் வசதி இல்லாததால், எந்தவித மான இழப்பும் இல்லை; இன்னலும் இல்லை; ஏக்கமும் இல்லை; எரிச்சலும் இல்லை. மாறாகத் தனக்குத்தானே உழைத்துக்கொள்வதில் உள்ள தனி இன்பத்தைத் துய்த்திடச் - சுவைத்திடப் - பாளைச் சிறை ஒரு பக்குவப் பள்ளியாக அமைந்ததாகவே நான் கருதுகிறேன். தனிமைச் சிறையிலே நான் தனித்துக் கிடந்த நிலையிலும், எனக்கு இனிமை வழங்கியவை பெருமை வாய்ந்த எழுத்து வேந்தர்கள் தீட்டிய சில அருமையான நூல்களே. திருநெல்வேலி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் மூலமாகப் பல புத்தகங்களை அப்போது படித்துச் சுவைத்திடும் வாய்ப்புக் கிட்டியது எனக்கு. என் மனத்தைக் கவர்ந்திட்ட ரஷ்ய கவர்ந்திட்ட ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் படைத்திட்ட 'தாய்' நூலைப்பற்றி முன்னரே குறிப்பிட் கார்க்கி டிருக்கிறேன். ஆங்கில ஏகாதிபத்தியத்தை இந்திய மண்ணில் ஆழமாக- அகலமாக - வேரூன்றச் செய்வதற்காக ஆர்வத்தோடு செயலாற்றிய வாரன் ஹேஸ்டிங்ஸ் பற்றிய புத்தகம் ஒன்றும் எனது படிப்புத் தாகத்துக்கு விருந்து படைத்தது பாளைச் சிறையில் 581