பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 எனக்கும் விடுதலை! ஒவ்வொரு நாளும் பொதுக் கூட்டங்களிலோ வேறு நிகழ்ச்சி களிலோ ஆயிரம், இலட்சம் என்று மனித முகங்களையே பார்த்துப் பார்த்துப் பரவசமுற்றிடும் எனக்கு இந்த உலக ஓட்டமே எப்படி இருக்கிறது என்று புரிந்திடாத நிலையில் - விரைந்து பறந்திடும் வண்டி, வாகனாதிகள் கூட எப்படி இயங்குகின்றன என்று அறிந்திட முடியாத நிலையில் இருண்ட நாட்கள் தனிமைச் சிறையில். ஆனால் அத்துடன் என்னுடைய பாளைச்சிறை வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும் என்றுஎன்னால் நம்ப முடியவில்லை. இன்னொரு வழக்கிலும் என்னைச் சிக்கிடச் செய்து மேலும் மேலும் இரும்புக் கம்பி களுக்கு அப்பால் விருந்து வைத்திடும் நோக்கோடு தானே என்னை அழைத்துச் சென்றனர் அப்போது! அதனால் தான் நான் பாளையங்கோட்டையிலிருந்து புறப்படும் போது அங்கிருந்தவர்களிடம், "போய் வருகிறேன்; என் அறையைக் காலியாகவே வைத்திருங்கள்" என்று கூறி விட்டு வந்தேன். ஆனால் பின்னர் நடந்த நிகழ்ச்சிகளோ மீண்டும் என்னைப் பாளைச் சிறைக்குக் கொண்டு போய்ச் சேர்த்திடவில்லை. பிரிந்து, புகை 4-4-1965 அன்று பாளையங்கோட்டையைப் வண்டியில் ஏற்றப்பட்ட நான் 5-4-1965 காலை சென்னை எழும்பூர் நிலையத்தில் இறக்கப்பட்டேன். ஆயுதந் தாங்கிய காவல் துறையினர் இருபுறமும் அணி வகுத்து நின்றிட - ஆர்வந் ததும்பிடும் கழகத் தோழர்கள் சற்றுத் தொலைவில் நின்று கரங்களை அசைத்துத் தங்கள் அன்பு முகத்தைக் காட்டிட சென்னை மண்ணிலே அடி வைத்திட்ட நான், விடுதலைக் காற்றினை நுகர்ந்திட முடியாமல் மீண்டும் போலீஸ் வேனிலே ஏற்றப்பட்டேன்; அதுவரை குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்படாததால் நீதிமன்ற ஆணைப்படி சென்னை மத்தியச் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். பாதுகாப்புச் மூன்று நாட்கள் கழித்து 8-4-65 ,, அன்று, சட்டம் 41 (5) பிரிவின் கீழ் 'முரசொலி' மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை முன்னிட்டு எழும்பூர் பிரதம பிரதம மாகாண மாஜிஸ்டிரேட் நீதி மன்றத்துக்கு என்னைக் கட்டுக்காவ லுடனேயே இட்டுச் சென்றார்கள். என்னிடமும் மாறனிடமும் குற்றப் பத்திரிகைகள் 591