பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரப்பட்டன. மறுபடியும் வழக்கு ஏப்ரல் 24ஆம் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சென்னைச் சிறைச் சாலையிலும் என்னைத் தனிமையில் தான் தவிக்க விட்டனர் ஆட்சியாளர்கள். திடீரென்று ஒருநாள் 1 ஒருநாள் என்னைத் திக்குமுக்காடிடச் செய்தது நெஞ்சு வலி; அடிக்கடி தலைச்சுற்றலும் ஏற்பட்டு என்னை அலைக் கழித்தது. இரத்த அழுத்தமும் குறைந்து காணப்பட்டது. ஒரு நாள் மயக்கமுற்றே விழுந்துவிட்டேன். நெஞ்சு வலியும் நின்றிடாமல் பல நரட்களாக நீடித்துக் கொண்டே இருந்ததால் சென்னை மத்திய மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று டாக்டர் இரத்தினவேலு சுப்ரமணியம் அவர்களிடம் காண்பித்தனர். நான் மருத்துவ மனையில் தங்கிச் சிகிச்சை பெற வேண்டுமென்று அவர் கூறினார். அதை ஏற்றுக் கொள்ளாமல் மீண்டும் சிறைச்சாலைக்கே திரும்பினேன். தமிழகத்தை ஆண்டிட்ட திரு பக்தவத்சலனார் அரசுக்கு எப்படித் அந்தத் திடீர் ஞானோதயம் உதயமாயிற்றே, தெரியவில்லை. பாதுகாப்புச் சட்டத்தில் 30(1)பி. பிரிவினை அது ரத்துச் செய்திட முடிவெடுத்தது. அதனால் அந்தப் பிரிவின் கீழ் பாளைச் சிறையிலே அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்திட்ட நானும் விடுதலைக் காற்றினை நுகர்ந்திடும் வாய்ப்பினைப் பெற்றவன் ஆனேன். நான் விடுதலை அடைந்திடப் போகும் செய்தி எப்படித்தான் தான் வெளியே பரவிற்றோ? ஆயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் - முன்னனித் தலைவர்கள்- வரவேற்புப் பாயிரம் பாடிட வந்திருந்தனர் சிறையின் வாயிலுக்கே. தனிமைச் சிறையிலே நான் அடைந்திட்ட அல்லலெல்லாம் என் நெஞ்சைவிட்டு அகன்றிடும் வண்ணம், கனிவு முகங்காட்டி என் கரம் பற்றி வரவேற்றனர் அருமைத் தோழர்கள். சிறையிலிருந்து விடுதலை பெற்றிட்டபிறகு சிறை பற்றிய என் எண்ணங்களைத் தெரிந்துகொண்டிடச் செய்தியாளர்கள் என்னை மொய்த்தனர்; முற்றுகையிட்டனர். இந்தியாவின் எல்லையில் ஒருபுறம் செஞ்சீனமும், மறுபுறம் பாகிஸ்தானும் மிரட்டிக்கொண்டிருந்த இருட்டு வேளை அது. அந்த நேரத்தில் உள்நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வினை உருவாக்கிடும் வகையில் மாறுபட்ட கருத்து மலர்களையும் ஒரே மாலையாகப் பின்னிடும் போக்கில்-தன்னுடைய செயல் 592