பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/662

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த அருமை நண்பரின் அச்சம் அவசியமற்றதாகவே எனக்குத் தோன்றியது. எனவே அந்த வரவேற்பு வரவேற்பு நிகழ்ச்சியில் இவ்வாறு எடுத்து வைத்தேன் என் எண்ணத்திற்கு சரியென்று பட்டதை: "இலக்கியமும் அரசியலும் பிரிக்க முடியாதவைகளாகும். இலக்கியத்திலிருந்து அரசியலைப் பிரிக்க வேண்டுமென்றால் தமிழ் இலக்கியத்தில் அறமாக விளங்கும் திருக்குறளில் சில பக்கங்களைக் கிழித்து விட்டுத்தான் படிக்க வேண்டும்......" தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியமாய்ப் - பொது மறையாய்ப் - புத்தொளி பரப்புவது திருக்குறள். அதிலேயே அரசியலைப் புறக்கணிக் காதது மட்டுமல்ல. நடுநாயகமான சிறப்பிடத்தையே அதற்கு வழங்கியிருக்கிறார் வள்ளுவர். அதனைக் கருத்திற்கொண்டே அரசியல் என்றதுமே அஞ்சி நடுங்குவோருக்கு, அருவருப்பைக் காட்டுவோர்க்குத் தெளிவினை அளித்திடவே, அந்த வரவேற்புக் கூட்டத்தில் அவ்வாறு பேசினேன். பம்பாய், ஆமதாபாத் நிகழ்ச்சிகளை ஒருவாறாக முடித்துக் கொண்டு 19-11-66 மாலை ஆறு மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது என்னைத் திணறிடச் செய்தது இங்குள்ள நண்பர்களின் வரவேற்பு.