பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'ஏறு, காரிலே!” -என்றார் அவர். "எங்கே அண்ணா, எதற்கு அண்ணா?" - என்றெல்லாம் வினாக்களை வீசவில்லை நான்; அவர்தம் பரந்த முகத்தையே பார்த்தேன். "மாநாட்டுக்காக ஓர் இடத்தைப் பார்த்து வைத்திருக்கிறேன். அதை உனக்கும் காட்டிவிட வேண்டும் என்று நினைத்தேன். அங்கே தான் இப்போது நாம் போகிறோம் -என்றார் அண்ணா. கார் பறந்தது. சில மைல்கள், சில மணித்துளிகள் கடந்திட்ட பிறகு, கார் நின்றது, சாலையில் ஓர் ஓரமாக. அண்ணா இறங்கி நடந்தார்; நானும் அவரைப் பின் தொடர்ந்தேன். ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு பரந்த வெளி. அதனைக் காட்டி- 'இதுதான் மாநாட்டிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடம்" என்றார். எனக்கே சற்று மலைப்பாக, திகைப்பாகவே இருந்தது. ஏனெனில் பார்க்கும் இடமெங்கும் பள்ளங்கள், மேடுகள், குன்றின் முகடுகள் போல் கற்களின் குவியல்கள். இடையிடையே இரண்டாள் உயரத் திற்கு மேல் மரம், செடி, கொடிகள், கள்ளிப் புதர்கள்! அந்தப் பகுதியின் அலங்கோலத்தைப் பார்வையால் அளந்திடும் போதே அண்ணா மேலும் தொடர்ந்தார்: 64 'இங்குதான் மாநாட்டை நடத்தியாக வேண்டும். நாவலரிடத்தில் சொல்லிவிட்டேன். என்.வி.என். இடமும் இந்த இடத்தைக் காட்டி விட்டேன். மற்றவர்களும் பார்த்துவிட்டனர். நீயும் பார்த்துக்கொள். இந்த இடம் மாநாடு நடைபெறுவதற்குரிய எழிலான பூமியாக மாற வேண்டும்." அண்ணா ஆணையிட்டு விட்ட பிறகு அதற்கு அட்டியேது? தயக்கம் ஏது? புதர்கள் மண்டிக் கிடந்த அந்த மலைப்பாங்கான மண், புதுமைச் சிந்தனைகள் மண்டிடும் பொலிவு மிக்க 'நீலமேகம் நகர்' ஆக மாற்றப் பட்டு விட்டது, மாநாட்டிற்காக! அதுவும் பதினைந்தே நாட்களுக்குள்! 661