பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/700

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"மத்திய அரசிடம் உரிமைக்காகப் போராட வேண்டும்: அதே நேரத்தில் இந்தியாவின் கட்டுக்கோப்பைக் கலைத்துவிடக் கூடாது” என்றும் அவர் கூறினார். இதே உணர்வோடுதான் முதலமைச்சர் அண்ணா அவர்கள் சேலம் இரும்பாலைக்காகச் 'சேலம் எழுச்சி நாள்' கொண்டாடிய போது மத்திய அரசுக்கு மாநிலத் தேவையை உணர்த்தும் நாளாக அது அடக்கத் துடன் கொண்டாடப்பட்டது; ஒரு மோதல் என்கிற அளவில் அது மூண்டெழவில்லை. ஆனால் அண்ணா அவர்களின் எச்சரிக்கைப்படி விழிப்போடு இயங்கிட மற்ற மாநிலங்களில் உள்ள எதிர்க்கட்சி ஆட்சிகள் தவறி விட்டன. அதனால்தான் காங்கிரசுக்கு எதிராக எழுந்த ஆட்சிகள் அனைத்தும் பிற இடங்களில் நாளாவட்டத்தில் கவிழ்ந்தன. கழக ஆட்சி ஒன்றுதரன்; அண்ணா காலத்திலும் அவருக்குப் பிறகும் நிலைத்து நிற்கிறது; ஐந்தாவது பொதுத் தேர்தலிலும் முன்னை விட அதிகத் தொகுதிகளைக் கைப்பற்றி நீடித்துக் கோலோச்சுகின்றது. தொகுதிகளைககை பபட்சிப் பொறுப்பினை தி மு. கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதும் மக்களின் துயர் துடைத்திடும் பணிகளில் முனைந்து ஈடுபட்டது. உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிட, அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றிட, தொலைதூர பஸ் கட்டணங்களைக் குறைத்திட, தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றிட உடனடி நடவடிக்கை களைக் கழக அரசு உற்சாகத்துடன் மேற்கொண்ட வேளையில் திடுக்கிடும் உண்மை ஒன்று எல்லாருடைய உள்ளத்தையும் உருக்கிற்று. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுத் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்பதற்குள் உள்ள இடைக்காலத்தில் 'காபந்து சர்க்கார்' நடத்திக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் பக்தவத்சலனார் இந்தி எதிர்ப்புச் சம்பந்தப்பட்ட முக்கியமான பைல்கள் சிலவற்றை எரிப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார். அவரது தவறான நடவடிக்கையை அறிந்து தமிழகமே பரபரப்பில் ஆழ்ந்தது. பீகாரிலும் மேற்கு வங்கத்திலும் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தபோதும் பைல்கள் சில ஓடி ஒளிந்தன என்னும் செய்திகள் அப்போது உலவிடத்தான் செய்தன என்றாலும் தமிழகத்தில் அதற்கு முன் 'பைல் எரிப்பு' நடைபெற்றதாக வரலாறு இலலை. எனவே அது மிகுந்த பதைப்பினை இங்கே ஏற்படுத்தியது. இதிலே வேதனைக்குரியது இந்த எரிப்பு வேலைக்கு வருத் தம் ஏதும் தெரிவிக்காதது மட்டும் அல்ல, அது சரியே என்றும் திரு பக்தவத்சலனார் வாதித்ததுதான்; அதுவும் என்னைத் தொடர்புபடுத்தி வாதித்தார். 694