பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட திட்டங்களில் ‘வீராணம் காவிரி நீர்த் திட்டமும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும். மக்கள் தொகை பெருகப் பெருக, சென்னை மாநகரத்தைக் குடிநீர்ச் சிக்கல் இடியெனத் தாக்குவதும் வழக்கமாகி விட்டது. அதனைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி பொன்னி நதியிலிருந்து தண்ணீரைக் கொண்டு வருவது தான் என்று தோன்றியது. ஆனால் எந்த இடத்திலிருந்து காவிரி நீரைத் திருப்புவது என்பது பெருங்குழப்பத்தைக் கொடுத்தது. முதலில் ஜேடர் பாளையத்திலிருந்து நீர் கொண்டு வரும் திட்டம் பற்றிச் சிந்திக்கப் பட்டது. அதற்குத் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான நான்காயிரம் ஏக்கர் நன்செய் நிலத்தையும் மூவாயிரம் ஏக்கர் புன்செய் நிலத்தையும் பெருந்தொகை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. எனவே ஜேடர்பாளையம் திட்டம் கைவிடப்பட்டது. பிறகு வீராணம் ஏரியே தகுந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. வீராணம் ஏரி காவிரியாற்றின் பாசனத் தொடரில் ஒரு கூறு. அது ஒரு பாத்திரம் போலப் பெரிய நிலையிலிருந்து நீரை அள்ளி யெடுத்துக் கொள்ள உதவும் ஒரு வசதி. மேட்டூரிலிருந்து வரும் காவிரி நீரை வீராணம் ஏரியின் வழி யாகச் செலுத்தி, மின்விசை இறைவைகளால் ஏற்றிக் குழாய்கள் மூலமாகச் சென்னைக்குக் கொண்டு வரும் வகையில் திட்டம் உருவாக்கப் பட்டது. 139 மைல் தூரம் குழாய்கள் வழியாக நீரைத் திருப்பிவிடும் இந்தத் திட்டத்தால் வீராணம் ஏரியையே நம்பிக் கொண்டிருக்கும் பாசனப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்குரிய வழி, துறைகளை மேற்கொள்ளவும் தீவிரக் கவனம் செலுத்தப்பட்டது. சென்னைக்குக் குடிநீர் கொண்டு வந்திடும் இந்தச் சீரிய திட்டத்தை 30-10-67 அன்று சென்னை - சைதாப்பேட்டையில் அண்ணா அவர்கள் துவக்கி வைத்தார்கள். என்னுடைய தலைமையில் நடைபெற்ற அந்த விழாவில் அவர் இவ்வாறு குறிப்பிட்டதும் என் நினைவில் மோதுகிறது: அலை' '"...எங்கெங்கு தேவையோ அங்கே செல்வது காவிரியின் இயல் பாக உள்ளது. கன்னட இலக்கியத்தைக் காட்டிலும் தமிழ் இலக்கியத் தில் தான் காவிரி பற்றிப் பலபடக் கூறப் பட்டுள்ளது. திராவிட நாகரிகத்தின் தொட்டிலாக அது சித்திரிக்கப்பட்டுள்ளது. 708