பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காசு பறிக்கும் இந்த முயற்சிக்குத் தில்லையில் குழி வெட்டப்படும். அழுக்கைப் போக்கிக் கொள்ள அனைவரும் திரண்டு செல்வீர்! பகை வரைக் குறை கூறிப் பல்லவி பாடிட மட்டும் நேரமில்லை இப்பொழுது! விடுதலை விருத்தமுடன் விரைந்து செல்வீர் தில்லைக்கு! பரணி பலபாடிப் பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரணை சிறிதுமில்லாச் சுயநலத்துச் சோதரர்கள் சிலர் கூடி வருணத்தை நிலை நாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியிலே மானங்காக்க மறத்தமிழா! போராடு! வருணாசிரமம் வீழ்க! -இப்படித் துவங்கிய 'முரசொலிதான்' இன்று விடுதலைப் படை வீரர் ஏந்துகின்ற கருவிகளில் ஒன்றாக இருக்கிறது. இப்படித் எழுதத் துவங்கிய கருணாநிதிதான் நான்! நான் எழுத்தாளனான வரலாறு இளம் எழுத்தாளர்களுக்குத் தெரிய வேண்டாமா? அதனால்தான் இவ்வளவும் சொல்கிறேன். மேடைப் பேச்சுக்கு என்னைத் தயாராக்கிக் கொண்டது பள்ளிக்கூட சொற்போர் போட்டிகளின் முதல் பேச்சுப்பற்றி என்னால் எண்ணிப் பார்க்காமலிருக்க முடியவில்லை. முதன் முதலாக நான் மன்றத்தில் நின்று எழுப்பிய குரல் 'நட்பு' என்ற பொருள் பற்றித்தான்! அதில் பாரதத்தில் எல்லாம் மேற்கோள் காட்டிப் பேசினேன். கர்ணனும் துரியோதனனும் ஆருயிர் நண்பர்கள். ஒரு நாள் கர்ணனும் துரியன் மனைவியும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அந்தச் சமயம் துரியோதனன் அங்கு வருகிறான். துணைவன் வருவதைக் கண்ட துணைவி மரியாதை காட்டுவதற்காக ஆட்டத்தை விட்டு எழுகிறாள். துரியன் வருவதைக் கவனிக்காத் கர்ணன் அவள் ஆட்டத்திலிருந்து போய் விட எண்ணுகிறாளாக்கும் என்று கருதி, அவளது முத்தாரத்தை இழுக்கவே ஆரம் சிதறிக் கீழே கொட்டுகிறது. எந்தக் களங்கமும் இல்லாமல் சிரித்துக்கொண்டே துரியோதனன் நண்பனைத் தட்டிக் கொடுத்து, எடுக்கவோ கோக்கவோ?" என்கிறான். சிந்திய முத்துக் களை எடுத்துக் கோக்கட்டுமா எனக் கேட்கிறான். நண்பனின் பெரு மனங் கண்டு கர்ணன் பூரித்துப் போகிறான். நண்பனுக்காகச் சோதரரைப் போர்க்களத்தில் சந்தித்து எதிர்த்து இறுதியில் உயிர் விடு கிறான். இந்த நிகழ்ச்சியை வில்லிப்புத்தூரார் பாரதத்திலிருந்து அழகாக எடுத்துச் சொல்லி மன்றத்தின் அமோக ஆதரவைப் பெற்றேன். அழகான தமிழில் தங்கு தடங்கலின்றிச் சொன்மாரி 69