பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/736

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(640 திருக்குறள்' வகுப்பு நடத்தியதன் மூலம் ஒரு புதிய வரலாறே படைத்துவிட்டார். அவர்தம் அறிவின் ஆழத்தை - கூர்மையைக் - கேள்வியுற்றதோடு மட்டுமின்றி நேரிலும் கண்டு வியந்து, 'யேல் பல்கலைக் கழகம் 'செஃபெல்லோஷிப்' என்னும் பட்டத்தை வழங்கியது அதுகாறும் அமெரிக்க அறிஞர்கள் மட்டுமே அந்தப் பட்டத்துக்கு உரியவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணா ஒருவர்தாம் அந்தச் சிறப்பினைப் பெற்ற முதல் வெளி நாட்டுக்காரர். அமெரிக்கச் செய்தியாளர்கள் எல்லாரும் ஆச்சரியக் கடலில் மூழ்கிடும் வண்ணம் இந்தியாவின் பெருமையே ஏற்றம் பெற்றிடும் வகையில் கட்சி மாச்சரியங்களையெல்லாம் கடந்து கருத்துக் கதிர்களை உதிர்த்த அண்ணா அவர்களைச் சென்ற இடமெல்லாம் ஆர்வம் ததும்பிட வரவேற்றிருக்கின்றனர் அமெரிக்க மக்கள். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அந்தச் சிறப்புமிகு இந்திய த் தலைவர் தங்கள் நாட்டுக்குத் திரும்பி வருவார், சிகிச்சை பெறுவார், பின்னர் தங்கள் விழிகளையே குளங்களாக்கி விம்மிடச் செய்வார் என்று அப்போது அவர்கள் எப்படி அறிவார்கள்? 1 அமெரிக்கா சென்றிருந்த அண்ணா திரும்பும் வழியில் ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு, 12-5-1968 அன்று இரவு தாயகம் வந்தடைந்தா