பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/759

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக்கொண்டாய் ? விரல் அசைத்து எழுத்துலகில் விந்தைகளைச் செய்தாயே, அந்த விரலை ஏன் மடக்கிக் கொண்டாய்? கண்மூடிக் கொண்டு நீ சிந்திக்கும் பேரழகைப் பார்த்துள்ளேன்... மண்மூடிக் கொண்டுன்னைப் பார்க்காமல் தடுப்பதென்ன கொடுமைக்கு முடிவுகண்டாய்; எமைக் கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்? எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்' கடற்கரையில் காற்று வாங்கியது போதுமண்ணா எழுந்துவா எம் அண்ணா' வரமாட்டாய், வரமாட்டாய இயற்கையின் சதி எமக்குத் தெரியும் அண்ணா நீ இருக்குமிடந் தேடி யான் வரும் வரையில் இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை ன் கால் மலரில் வைப்பேன் அண்ணா வணக்கம் இன்று கொடுமை! முதற்பாகம் முற்றிற்று