பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதன் வழி நிற்க விரும்பியதும் இல்லை. நானும், என் நண்பர் தென்னனும் உட்கார்ந்து அழுதோம். நாடகக் கொட்டகைக்குள்ளேயே வந்து கடன்காரர்கள் முற்றுகையிட்டு விட்டனர். கதாநாயகி எங்கள் நாடகத்தில் கதா நாயகி வேடம் தரித்த நடிகைக்கு சம்பளமும், அவள் ஊருக்குச் செல்ல வழிச்செலவுப் பணமும் தந் தாகவேண்டும். வழியெதுவும் தென்படவில்லை. நாடகத்தில் ஒரு நண்பர் எனக்கு வெள்ளிக் கோப்பையொன்று பரிசாகக் கொடுத்தார். இருபது ரூபாய் பெறும் அந்தப் பரிசுப் பொருள். அந்தக் கோப்பையை அந்த நடிகையிடம் கொடுத்து வழியனுப்பி வைத்தோம். பாக்கிக் கடனைத் தீர்ப்பது எப்படி? தென்னனின் யோசனைப்படி யாருக்கும் தெரியாமல் நாகப்பட்டினம் ஓடினோம். அங்கு திராவிடர் கழகத் தலைவர் ஆர்.வி. கோபால் அவர்களை அணுகி, எங்கள் நிலைமையை விளக்கினோம். ஆர். வி. கோபால் அவர்களுக்கு என்மீது நல்ல அன்பு உண்டு. இருந்தாலும் நூறுரூபாய் கடன் தருவதென்றால்... அதற்குச் சிறிது யோசித்தார். அங்கு உள்ள நண்பர்கள் பக்கிரிசாமி, மலைக்கொழுந்து ஆகியோர் எங்களுக்காகச் சிபாரிசு செய்தனர். இறுதியில் நூறு ரூபாய் பணம் கிடைத்தது. எப்படித் தெரியுமா? திரு. ஆர். வி. கோபால் ஆரம்பிக்க விருந்த நாகை திராவிட நடிகர் கழகத்துக்கு 'பழனியப்பன்' நாடகத்தை நூறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டார்கள். அதன் மூலம் ரூபாய் கிடைத்தது. என்னுடைய முதல் நாடகம் 'பழனியப்பன்', 'சாந்தா. என்னும் தலைப்பில் பல இடங்களில் நடத்தப்பட்டது. அதுவே 'நச்சுக் கோப்பை' என்னும் பெயரில் இன்றைக்கும் பல இடங்களில் நடத்தப் படுகிறது. ஒரு நாடகம் விற்பனையானதும் மேலும் ஆசை எழுந்தது எனக்கு. இன்னும் பல நாடகங்களை எழுதி விற்பனை செய்யலாம், அதையே வாழ்க்கைக்குத் தொழிலாகவும், அதே சமயம் நல்ல கொள்கைப் பிரசார சாதனமாகவும் கொள்ளலாம் என்று கருதி மளமளவென்று எழுத ஆரம் பித்தேன். அந்த முயற்சிக்கு என் வீட்டாரும் உறவினரும் தடையாக நின்றனர். "ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்து மாதம் ஐம்பது ரூபாய் சம்பாதித்தாலும் போதும்! அதற்கு முயற்சி செய்!'" என்று என்னை விரட்டத் தொடங்கினார்கள். எனக்கு வேலை பார்ப்பது என்பது விஷம் போல் இருந்தது. மன நிம்மதி குலைந்தது. சோற்றுக்குத் தண்டமாக வீட்டில் இருக்கிறோம் என்ற நினைவு வேறு என்னைக் குடைய ஆரம்பித்தது. இந்த வெட்கக்கேட்டில் காதல் ஒரு கேடா? அது வும் வந்து சேர்ந்தது. காதலுடன் கூடக் கட்டுப்பாடும் தொடர்ந்தது. கன்னியொருத்தியின் கைப்பிடித்து வாழ்க்கையின் பயணம் தொடங் கலாம் என்று நானே தீர்மானித்தேன். அவளும் சம்மதித்தாள். இடையே பெற்றோர் குறுக்கிட்டனர். இரு தரப்பிலும் படை திரண்டது. இறுதியில் காதல் தோற்றது. 75