பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 நெஞ்சுக்கு நீதி துறை முதலமைச்சரின் பொறுப்பிலே இருப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. வறட்சி நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டது மட்டு மின்றி, போதுமான உணவு தானியத்தையும்-தேவையான வறட்சி நிதியையும் மாநில அரசுக்கு மத்திய அரசு உடனடியாகத் தந்து உதவிட வேண்டுமென்று சட்டப்பேரவையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் பேசும் போது காங்கிரஸ் கட்சித் தலைவர் கருத்திருமன் அவர்கள் "நீங்கள் எப்போதும் உலகில் கிடைக்காத விஷயங்களைத்தானே கேட்பீர்கள்!" என்று கிண்டல் செய்தார். அதற்கு நான் : "அய்யா! நாங்கள் ஒன்றும் பாரிஜாத மலரைக் கேட்கவில்லை! கிடைக்கச்கூடிய தானியத் தையும், நிதியையும்தான் கேட்கிறோம்!" என்று கூறினேன். 7 கருத்திருமன், ஒரு எதிர்க்கட்சிக்காரர் என்ற முறையில் கேலியாகவும், காரசாரமாகவும் பேசுவாரே தவிர பொதுவாக நல்ல உள்ளம் படைத்தவர். அவர் அவையில் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த போதுதான் எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்ற தகுதியும், அந்தப் பதவிக்குரிய வசதிகளும் வழங்கப்படுமென்று அறிவித்தேன். அதனை அவர் வரவேற்றார் என்றாலுங் கூட, அவர்களது கட்சிக்குள்ளிருந்த பிணக்கின் காரணமாக அந்த வசதிகளை அப்போது ஏற்பதற்கில்லையென்று கூறிவிட்டார். ஆனால், மேலவையில் திரு. ராஜாராம் நாயுடு அவர்கள் காங்கிரஸ் தலைவராக இருந்தபோதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும், அதற்குரிய வசதிகளையும் ஏற்றுக் கொண்டார். அப்பொழுதுதான் முதன் முதலாக எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அதற்கு வசதிகள் என்பதும் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் வறட்சி நிலவரத்தை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்து செயல்பட்டபோது, காங்கிரஸ் கட்சி மட்டும் தமிழகத்தில் வறட்சி இருப்பதையே ஒப்புக் கொள்ளாதது போல அறிக்கைகளை விட்டுக் கொண்டிருந்தது. வறட்சிப் பகுதிகளைக் காண்பதற்குப் பிரதமரை நான் அழைத்ததுகூடத் தேவையற்றது என்றும் தமிழ்நாட்டில் பசுமைத் திட்டுக்கள் நிறைய இருக்கின்றன என்றும் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு.சி.சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருந்தார்கள்.