பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 87 பலரது கைகளில் குழந்தைகள் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தன. ஜொலிக்கும் அணிமணிகளைப் பூட்டிக்கொண்டு அமர்ந்திருந்த தாய்மார்களுக்கு அடுத்த வரிசையில் ஆயிரக்கணக்கான ஆண்கள் வீற்றிருந்தனர். விழா நடந்த இடம் வயல்வெளி ஆனதால், எங்கள் கார் களைச் சற்றுத் தொலைவில் உள்ள சாலையில் நிறுத்திவிட்டு நடந்தே விழா மேடைக்குச் சென்றோம். வாசலில் யானைகள் அலங்காரமாக நிறுத்தப்பட்டு எங்களை வரவேற்று மாலையணி வித்தன. "ஏன்; இவ்வளவு ஆடம்பரமான விழா?" என்று நான் நண்பர் மகாலிங்கத்தைக் கேட்டுக்கொண்டே மேடைக்குச் சென்று அமர்ந்தேன். "சர்க்கரை ஆலைக்கு இது முக்கியமான சாலை! அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடத்தான்!" என்று விளக்கமளித்தார். "ஏ, அப்பா! அதற்காக ஆயிரக்கால் மண்ட பத்துத் தூண்களைப் போல இப்படி பந்தல் கால்களை நட வேண்டுமா?" என்று கேட்டேன். வயல் மண் களி மண்ணாக இருப்பதால் கெட்டியான மரங்களை நட வேண்டியதாயிற்று" என்றார். பிறகு விழா ஆரம்பமாயிற்று. திரு. மகாலிங்கம் தனது வரவேற்புரையை ஆற்றி முடித்தார். விழாவுக்குத் தலைமை ஏற் றிருந்த மதி அவர்கள் பேசுவதற்கு முன்பே நான் சாலைத் திறப்பு விழாவை நடத்திவிட்டு இறுதியில் பேசுவதாக இருந்தேன். மதி பேசத் தொடங்கிய பொழுது இரவு ஏழு மணி! சிறு தூறல்கள்! பெருமழையொன்றும் வராது; அப்படியே வந்தாலும் கொட்டகையில் ஒரு துளியும் விழாது என்று மேடை யிலிருந்தோர் கூறிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கெல் லாம் மெல்லக் காற்று வீசியது. திடீரென அந்தக் காற்று சுழன்று சுழன்று அடிக்கத் தொடங்கியது. ஏதோ ஒன்று நிகழப்போகிறது என்ற சந்தேகம் என் உள்ளத்தில் பலமாக எழுந்தது. கல் மண்டபம் போல் கட்டப் பட்டிருந்த அந்தக் கொட்டகை அந்தக் காற்றில் மெல்ல அசைந்து கொடுத்தது. கோபுரமொன்று நமக்கு அருகாமையில் இடிந்து விழுவதுபோல இடி முழக்கம். சுழற்காற்று மேலும் வலுப்பெற்று வீசியது. சிறிது நேரத்தில் காற்று நின்றுவிடும் என்ற தைரியத்தில்தான் அனைவரும் உட்கார்ந்திருந்தனர். ஆனால் கண்மூடிக் கண் திறப்பதற்குள் அந்தப் பேராபத்து நடந்துவிட்டது! காற்று தனது தனது முழு ஆற்றலையும் கொண்டு