பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 91 ☐ யின் பேர் தெய்வம் என்போம், மற்றும் ஓதிடும் தெய்வங்கள் பொய் என்றுரைப்போம்” எனப் பாரதியார் திட்டவட்டமாகக் கூறுவதும் - இந்தச் சமுதாய மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுமே யானால், சாதிகளின் பெயராலும் கடவுள்களின் பெயராலும் நடைபெறும் சண்டை சச்சரவுகள் எனும் நச்சரவங்கள் நலிந்து மெலிந்து ஒழிந்திட வழியேற்படும். ஒரு சக்தி இல்லாமல் உலகில் காரியங்கள் நடைபெறு கின்றனவா? ஆத்திகர் தரப்பிலிருந்து எழுப்பப்படும் இந்தக் கேள்விக்கு ஒரே பதில்: "ஆமாம்! சக்தியின் சுழற்சியால்தான், சகலமும் நடைபெறுகிறது" என்பதுதான்! இதில் ஏற்படுகிற கருத்து மாறுபாடு ஒன்றே ஒன்றுதான்! இந்த உலகம் எனப்படும் பூமி மட்டுமல்ல; விண்வெளி யில் இந்தப் பூமியைப் போலவும், இதைவிடப் பலமடங்கு பெரியதாகவும் எத்தனையோ கோளங்கள் இன்னமும் எண்ணிக்கைக்கு அடங்காமல் பரவிக்கிடக் கின்றன! வானத்து மின்மினிகள் என வர்ணிக்கப்படுகிற நட்சத்திரங்கள், பூமியிலி ருந்து கோடிக்கணக்கான மைல்கள் தொலைவில் பூமியை விடப் பல மடங்கு; அளவில் பெரிதாய் விளங்குகின்றன! சந்திரமண்டலத்திற்கு மனிதன் சென்று திரும்பிய வெற்றிக் கொடியை விஞ்ஞான யுகம் தூக்கிப்பிடித்துள்ள காலம் இது! இந்த விஞ்ஞானச் சாதனங்கள் இல்லாத காலத்திலேயே விண்வெளிக் கிரகங்களின் இயக்கத்தைக் கண்டறிந்து, கணித்துச் சொன்ன மேதைகளாக நமது மூதாதைய பலர் திகழ்ந்திருக்கிறார்கள். கோள்கள்' சுழல்கின்றன! சூரியனின் ஒளி பூமியில் பாய்ந்து பகல் பொழுதைத் தருகிறது! அப்போது பூமியின் இன்னொரு பகுதி இரவில் குளித்துக்கொண்டிருக்கிறது! நிலவு தேய்கிறது - வளர்கிறது; அது போன்ற தோற்றத்தைக் காட்டு கிறது! அணுவை எத்தனையோ லட்சத்தில் ஒன்றாகப் பிளந்தால் இருக்கக்கூடிய அளவான கிருமிகளின் உருவத்திலேயிருந்து, யானைகள் வரையிலான பெரிய உருவங்கள் இந்தப் புவியில் தோன்றுகின்றன. இவற்றுக்கிடையேதான் மனிதனும் தோன்றி னான். எல்லா உயிரினங்களுக்கும் உண்பதற்கு வாயும், கொள்வ தற்கு வயிறும், செரித்தது போக எஞ்சியதைக் கழிப்பதற்கு வகையும் அந்தந்த உயிரினங்களுக்கு ஏற்றவாறு அமைந்து உள்ளன. உடலுறவு காரணமாக ஒரு சிறு துளியில் ஐந்து அல்லது ஆறடி மனிதனின் அங்கமெல்லாம் அடங்கியிருக்கிற