பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 நெஞ்சுக்கு நீதி யாரும் விந்தையைக் காணுகிறோம். வாயில்லாப் பிராணிகள் சொல்லித் தராமலே "செக்ஸ்" விவகாரங்களைக் கற்றுக்கொண்டு, பிள்ளைப் பேறுகளைக் கூடத் தங்களுக்குத் தாங்களே கவனித் துக் கொள்கின்றன! இயற்கை, செழிப்பையும் வழங்கிச் சிரிக்கிறது! சீற்றமும் கொண்டு சீரழிக்கிறது! மாநதிகள், மரமடர் காடுகள், அழகுமிழ் நீர்வீழ்ச்சிகள், அருவிகள் - இப்படி எத்தனை எத்தனையோ? - இத்தனைக்கும் ஒரு சக்திதான் காரணம்! ஆனால் அந்தச் சக்தி; ஒரு பெண் உருவாகவோ அல்லது ஆண் உருவாகவோ அல்லது இரண்டும் இணைந்த உருவாகவோ ஓரிடத்தில் அமர்ந்து, சிந்தித்து, கற்பனைகள் செய்து இவற்றையெல்லாம் உருவாக்கி அப்படி உருவாக்கியதைத் தானே அழித்து-அல்லது, தான் உருவாக்கிய உயிர்களிலேயே நல்லவைகளாக ஒரு பகுதியை யும் தீயவைகளாக ஒரு பிரிவையும் அமைத்து-செயல்பட்டுக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி கிளம்பும் போதுதான்- வாதமே வளர்கிறது! பூமியுட்பட விண்வெளியில் கோள்களின் இயக்கங்களுக் கும், அந்தந்தக் கோள்களில் உள்ள மாறுபாடுகளுக்கும்-உருவ மற்ற இயக்கும் சக்தியொன்று காரணமாகத் திகழ்கிறது! அந்தச் சக்தி, பூமியிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரையில் ஆகர்ஷண சக்தியாக இயங்குகிறது! பூமியையும் தன்னைத் தானே சுற்றவைத்து சூரியனையும் சுற்றி வருமாறு செய்துகொண் டிருக்கிறது! எல்லையற்ற அண்டவெளியில் நிகழ்கின்ற அற்புத மாற்றங்கள் அனைத்துக்கும் அந்தச் சக்தியே அடிப்படை! அந்தச் சக்தி, படைக்கப்பட்டதல்ல! கோடி-கோடி-கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன்பு என்றெல்லாம் வரையறுத்துக் கூறமுடியாத காலந்தொட்டு அந்தச் சக்தி இயங்குகிறது. அந்தச் சக்தியின் காரணமாக யுக யுகாந்திரமாக ஏற்படும் பரிணாம வளர்ச்சி (Evolution)யின் பல்வேறு கட்டங்கள்தான்; நாம் வாழுகிற பூமியில் மட்டுமல்லாமல் எண்ணற்ற மாறுபாடுகளாகும்! விண்வெளியிலேயே பூமியென்ற கோளே இல்லாமல் இருந்த ஒரு காலமும் உண்டு! சூரிய கிரகத்தில் உடைந்த ஒரு பகுதி நெருப்புக் கோளாக விண்வெளியில் சுழன்று -கணக்கிலா நூற்றாண்டு களுக்குப் பிறகு குளிர்ந்து, நிலப்பகுதி நீர்ப்பகுதிகளெனப் பிரிந்து, இன்னமும் நெருப்பைக் கருக்கொண்டிருக்கிற பகுதி