பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 95 அப்படிக் கடவுள் நம்பிக்கையின் முலம் மன ஆறுதலைப் பெறுகிற மக்களின் பால் தலையிட்டு நாத்திகக் கருத்தைத் திணிக்க வேண்டுமென்பதில்லை. அதேபோல ஆத்திகக் கருத்துடையவர் களும் நாத்திக எண்ணம் படைத்தவர்களை; வெறுத்து ஒதுக்கப் பட வேண்டிய கூட்டம் என்று புழுதி வாரித் தூற்ற வேண்டிய தில்லை. பண்டித ஜவகர்லால் நேரு அவர்களும், பகத் சிங்கும் தங்களை நாத்திகர்கள் என்றே பிரகடனப் படுத்திக் கொண்டனர். மார்க்சிய வர்க்கப் பார்வையில் நாத்திகக் கொள்கைதான் வலிமையுடன் எடுத்துக் காட்டப்படுகிறது. கடவுள் நம்பிக்கை-கடவுள் மறுப்பு ஆகிய இந்த விவாதம் நடத்திக்கொண்டிருப்பதைவிட, ஆற்றவேண்டிய வேறு பணிகள் நிரம்ப இருக்கின்றன. கடவுள் மறுப்பாளர்கள், நம்பிக்கையாளர் களின்மீது காழ்ப்புக் காட்டத் தேவையில்லை. அதேபோல கடவுள் நம்பிக்கையாளர்களும் அந்த நம்பிக்கையை முதலீடாகக் கொண்டு மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி பிழைப்புக்கோர் வழியைத் தேடுதல் தீது! அவர்களிடம் மக்கள் ஏமாறுவது அதனினும் தீது! பெரியார் அவர்கள் ஊருக்கு ஊர் பிள்ளையார் பொம்மை களைச் செய்து நடுத்தெருவில் உடைக்கச் சொன்னபோது, திராவிடர் கழகத்தின் அந்தத் திட்டம் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனராம் அண்ணா அவர்களிடத்தில் நிருபர்கள் கேட்டபோது "நான் பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன், பிள்ளையாருக்குத் தேங்காயும் உடைக்க மாட்டேன்' என்று கூறியதின் மூலம் கடவுள் பிரச்சினையில் கழகத்தின் கருத்தைத் தெளிவு படுத்தினார். இதை நான் எழுதுகிறபோது நண்பர் எம்.ஜி.ஆர். அவர் களை முதலமைச்சராகக் கொண்ட அகில இந்திய அ.தி.மு.க. ஆட்சி நடைபெறுகிறது. முதல்வர் எம்.ஜி.ஆர்., வேறு ஒரு மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கு அடிக்கடி போய் வருகிறார். அப்படிச் சென்று அம்மனைத் தரிசிப்பதும், பூஜிப்பதும் தனது உரிமை என வெளிப்படையாக வாதிடுகிறார். ஆனால் 1953-ஆம் ஆண்டு என்ன நடைபெற்றது? தி.மு.கழகத்தில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருப்பதிக்குச் சென்று வணங்கினார் என்று பத்திரிகையில் செய்தி வந்ததும் அவருக்கு யதிரான அணியைப் பின்னிருந்து முடுக்கிவிட்டவர்களில் முக்கிய மானவராக இருந்தவர் இதே எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!