பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 இயக்கத்தில் சிவாஜி "நான் பிறந்த வீடும் புகுந்த வீடும் ஒன்று சேர்ந்தது ன் கண்டு என் உள்ளம் மகிழ்ச்சியால் பொங்குகிறது". இப்படிச் சொன்னவர் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். சொன்ன இடம் சென்னைக் கடற்கரைக் கூட்டம். சொன்ன ஆண்டு 1979 அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு; ஆம் - தி.மு. கழககத்தின் சார்பில் கொண்டாடப்பட்ட விழாவுக்கு திருமதி இந்திரா காந்தி வந்திருந்தார். திடீரென்று 1979-ஆம் ஆண்டுக்கு வந்துவிட்டேனே யென்று யாரும் வியப்படையத் தேவையில்லை. இப்போதுநான் 1950-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே சில நிகழ்ச்சிகளை நிழலாட விடப் போகிறேன். சிவாஜி அப்படிச் சொன்னதை திருமதி இந்திரா காந்தி அவர்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்லப் பட்டது. அப்போதுதான் அந்த அம்மையாருக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திராவிடர் கழகக் காலந்தொட்டு இந்த இயக்கத்திலே இருந்து வளர்ந்தவர் என்ற தகவலே தெரியும்! பிறந்த வீடான திராவிடர் இயக்கமும், புகுந்த வீடான காங்கிரஸ் கட்சியும் தேர்தல் உறவு கொண்டதைத்தான் சிவாஜி அப்படி சுவைபடச் சொன்னார் என்பதுணர்ந்த லட்சோப லட்சம் மக்கள் அடங்கிய அந்தக் கூட்டம் ஆர வாரம் செய்து கையொலி முழங்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் 1949-ல் தொடங்கப்படு வதற்கு முன்பே திராவிடர் கழகத்தில் ஈடுபாடு கொண்டவர் சிவாஜி! மராட்டிய மாவீரன் சிவாஜி ஒரு மாபெரும் ராஜ்யத்தைத் தனது வாள் முனையால் உருவாக்கினான் என்றாலும்கூட மன்னனாக மகுடம் புனைய அவனது குலம் இடம் தரவில்லையென்று பழமைவாதிகளும் அவர்கட்குப் பாதுகாவலரான காக பட்டரும் தடுத்துரைத்து நின்ற வரலாற்றை அண்ணா அவர்கள் "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் அல்லது சந்திர மோகன்" என்ற ஒப்பற்ற மாகத் தீட்டியிருந்தார். நாடக