பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நெஞ்சுக்கு நீதி அந்த நாடகத்தில் அண்ணா அவர்களே காகபட்டர் வேடம் தாங்கி நடித்தார். காவியுடை, கமண்டலம் இவற்றுடன் அண்ணா காகபட்டராகத் தோன்றிப் பேசியதையும், நடித்ததை யும் பாராட்டிப் புகழாத நடிகர்களே இல்லை! அந்த நாடகத்தில் சிவாஜியாக "எம். ஜி. ராம்சந்தர்" நடிப்பார் என்று அண்ணாவின் "திராவிட நாடு" பத்திரிகையில் விளம்பரங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அப்போது நண்பர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் "ராம்சந்தர்" என்ற பெயரில்தான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் திடீரென அவர் அண்ணாவின் நாடகத்தில் நடிக்க இயலாது எனத் தெரிவித்து விட்டார். அதில் நடிப்பதால் அவரது கலைத்துறை முன்னேற்றத்திற்குத் தடை ஏற்படுமெனச் சிலர் அவரை அச்சுறுத்தி விட்டார்கள். . அதனால் அவர் நடிகமணி டி. வி. நாராயணசாமி அவர்களின் மூலமாகத் தனது முடிவை அண்ணாவுக்குத் தெரிவித்து விட்டார். பல அண்ணா எழுதிய நாடக உரையாடல்களைப் இடங்களில் மாற்றி அமைக்க வேண்டுமென்று டி.வி.என். அவர்களிடம் எம்.ஜி.ஆர். தெரிவித்ததாகவும், அதைக் கேட்டு அண்ணா வியப்படைந்ததாகவும், எம்.ஜி.ஆர். இஷ்ட துக்கு வசனங்களை மாற்ற அண்ணா ஒப்புக் கொள்ளாததைக் காரணம் காட்டி எம். ஜி.ஆர். அந்த நாடகத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும் டி. வி. என். அவர்களே பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். நாடக மேடையில் புகழ் பெற்று விளங்கியவரும், திராவிடர் கழக ஈடுபாடுடையவருமான நண்பர் வி.சி. கணேசனை சிவாஜி வேடம் தாங்குமாறு அண்ணா அழைத்தார். அண்ணாவின் அழைப்பையேற்று சிவாஜி வேடத் தில், கணேசன் நடித்தார். அந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கிய பெரியார் அவர்கள் வி.சி.கணேசனை சிவாஜி கணேசன் என்று அன்பொழுக அழைத்துத் தட்டிக் கொடுத்தார். அன்று முதல் வி. சி. கணேசன் சிவாஜிகணேசன் ஆனார். "சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்" என்ற அந்தப் புரட்சி கரமான வரலாற்று நாடகம் தமிழகத்தில் பல இடங்களில் நடைபெற்றது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து 1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்ட அண்ணா அவர்களின் கலைத்துறை அணியில் சிவாஜியும் வீறுநடை போட்டார்.