பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 101 தொடர்ந்து 'பராசக்தி' படப்பிடிப்பு நடந்தது! எனக்கும் சவாஜிக்கும் இருந்த நட்பு, யாராலும் விலக்க முடியாத பாச மாக உருவெடுத்தது! அந்தப் பாசம் எப்படிப்பட்டது என்பதை 1963- ஆம் ஆண்டு என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்த போது வெளியிடப்பட்ட ஒரு மலரில் சிவாஜியே வெளிப் படுத்தியிருக்கிறார். சொ "சிறு வயது முதல் எங்களுக்குள் நெருக்கமான பழக்கம் உண்டு. இதற்கு எத்தனையோ காரணம். கலையோ, அன்போ, குணமோ, எங்களை எதுவோ உயிராக இணைத்து வைத்திருந்தது. நாளடைவில் அது வளர்ந்து வலுப் பெற்றது! அவர்! அது யார்? வாய் நிறைய "மூனா கானா' -நான் இனிமையோடு அழைக்கும் அவர்தான். அந்தக் காலங்களில் 38148 இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் அஞ்சுகம் அம்மையார் அநேக நாட்கள் ஒன்றாகவே உணவு படைப்பது உண்டு. அப்போதெல்லாம் அவர்கள் பரிமாறுவதில் கொஞ்சம் பாரபட்சமாக நடந்து கொண்டதை நான் கவனிப் பதும் உண்டு. நல்ல பண்டங்களை ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்குக் குறைவாகவும் போடுவார்கள். "இப்படிச் செய்யலாமா? இது நீதியா?" என்று நான் கேட்பேன். கிளை நூலகம், தீண்டிவனம் "நீ செல்லப்பிள்ளை - உனக்கு அதிகம்தான் " என்பார்கள் அந்தத் தாய். அந்தச் செல்லத்தை மறந்து விட்டுப் போய்விட்டார்கள். நான் என்றும் அந்த அன்புச் செல்லத்தை மறக்க முடியாது. எனக்கு அஞ்சுகம் அம்மையாரும் ஒரு தாய்! இது அந்த மலரில் சிவாஜி எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி. படப்பிடிப்பு வேலைகளில் சிவாஜி ஈடுபட்டதால் சில நேரங்களில் அண்ணா எழுதிய "சந்திரமோகன்' நாடகத்தில் சிவாஜி வேடத்தை நண்பர் ஈ.வே.கி.சம்பத் அவர்கள் ஏற்று நடித்தார். அதில் சிவாஜிக்கு வருத்தமில்லை யென்றாலும் கணேசனைப் போல சம்பத்தால் நடிக்க முடியவில்லை யென்று பலரும் விமரிசனம் செய்த காரணத்தால் ஏதோ ஒரு இனம் தெரியாத வெறுப்பு சிவாஜி கணேசன் சம்பத்துக்கு மீது