பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நெஞ்சுக்கு நீதி ☐ ஏற்பட்டது. அதன் அண்ணாவிடம் சமயம் ஊன்றப்பட்டது. காரணமாக சிவாஜியைக் குறித்து நேரும்போதெல்லாம் கலக விதை ஒருமுறை "சந்திரமோகன்” நாடகம் சென்னையில் தியாகராய கல்லூரி கலை அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவாஜி கணேசன் அண்ணா வுடன் அந்த நாடகத்தில் நடிப்பதாக ஏற்பாடாயிற்று! அண்ணா, ன், சென்னை சிவாஜி வேடத்திற்கான வசனங்கள் அடங்கிய பாடப் புத்தகம் கணேசன் அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. நாடகம் நடக்க இரண்டு மூன்று நாட்கள் இருந்தபோது ஒரு நாள் அண்ணா, நான், சம்பத், சிவாஜி கணேசன் ஆகியோர் 'சைனீஸ் ரெஸ்டாரண்ட் ரெஸ்டாரண்ட்" டுக்குச் சென்று மதிய சாப்பிட்டோம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது. சிவாஜி அண்ணாவைப் பார்த்து, "அண்ணா! இப்போதெல்லாம் வயது ஆக ஆக நாடக வசனங்களை மனப்பாடம் செய்வது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது! சிவாஜி பாத்திர வசனங்களை இரவு பகலாக உருப்போடுகிறேன்!" என்று கூறினார். உணவு அண்ணாவும் ஏதோ வேடிக்கையாகச் சொன்னார்? சிரித்துக் கொண்டே உரையாடியவாறு சாப்பிட்டு முடித்தோம். பிறகு சிவாஜி எங்களிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டார். அண்ணா, நான், சம்பத்து மூவரும் காரில் போய்க்கொண் டிருக்கிறோம். அப்போது சம்பத்து அண்ணாவிடம், "இந்த கணேசனுக்கு அதற்குள் எவ்வளவு ஆணவம் வந்துவிட்டது. உங்கள் வசனங்களை மனப்பாடம் செய்வது கஷ்டமாயிருக் கிறது என்று உங்களிடமே சொல்கிறான்! என்று அண்ணா மனத்தில் விஷ விதையைத் தெளித்தார். அப்போது அண்ணா அதை மறுத்து, இல்லை சம்பத்! வயது ஆக ஆக மனப்பாடம் செய்வது கஷ்டமாக இருக்கிறது என்றுதான் கணேசன் சொன்னது! அதைத் தவறாக எடுத்து கொள்ளக் கூடாது!" எனப் பதில் அளித்தார். இப்படிக் காரில் நடந்ததை; இதோ இப்போது நான் எழுதுகிற வரையில் சிவாஜியிடம் கூறியதில்லை! ஆனால் சிவாஜி யைப்போல் என்னிடம் நெருங்கிப் பழகிய நண்பர்களிடம் மட்டும் இதைக் கூறி வருத்தப்பட்டிருக்கிறேன்.