பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நெஞ்சுக்கு நீதி கூற நேரிட்டது. ஒரு விடுதலை வீரனைப்பற்றி எண்ணிய பொழுது ஈழத் தமிழ் விடுதலை வீரர்களிடம் தானாகவே இதயம் சென்று விட்டது. எனவே நெஞ்சத்தை அங்கிருந்து மீட்டுக்கொண்டு விட்ட 18-ஆம்நாளில் இருந்து வந்து 1969 ஏப்ரல் தொட்டுத் தொடருகிறேன். இடம் டெல்லியில் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் என். டி. சி. எனப்படும் தேசீய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திற்கு அன்றுதான் சென்றேன். முதல்வரானபிறகு கலந்து கொள்ளும் முதல் தேசீய வளர்ச்சிக் குழுக்கூட்டம் அது! என்னுடன் நிதி யமைச்சர் மதியழகன் அவர்களும் வந்திருந்தார். அந்தக் கருத்துக்களை கூட்டத்தில் நான் தமிழில்தான் பேசினேன். ஆங்கிலத்தில் தொகுத்தெழுதிப் படிக்கலாம் என்றாலுங் கூட நான் அந்த முதற் கூட்டத்தில் தமிழில் பேசினேன். அது ஆங்கிலத் தில் மொழி பெயர்க்கப்பட்டது. மத்திய மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய வேண்டிய காலம் வந்துவிட்டது என்றும், அந்த முயற்சியின் முதற்கட்டமாக முதலமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்று மத்திய மாநில உறவுகளைப் பற்றி விவாதித்திட வேண்டுமென்றும் தமிழக அரசின் சார்பில் நான் கருத்து அறிவித்தேன். " அந்தக் கூட்டம் பற்றி செய்தி வெளியிட்ட யு. என். ஐ நிறுவனம், "இந்தக் கூட்டத்திலேயே மத்திய மாநில அரசுகளின் உறவு பற்றி யோசனை கூறியது தமிழக முதல்வர் ஒருவர்தான்" என்று குறிப்பிட்டிருந்தது நான் அன்று ஆற்றிய உரையில், தொழில் முன்னேற்றத் துக்குச் சம வாய்ப்பு கிடைக்கவேண்டுமென்றும், பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் மத்திய மாநில உறவு வளரும் என்றும். வங்கிகள் தேசீய மயமாக்கப்பட வேண்டுமென்றும், பொதுத் துறை, தனியார் துறையை விட அதிக முதலீடு கொண்டிருக்க வேண்டுமென்றும், இன்றைய தேவை, ஏழைகளைச் சுற்றியுள்ள இருள் நீக்கும் திட்டங்களே என்றும் விரிவாக எடுத்துரைத்தேன். வங்கிகள் தேசீயமயமாக்கப்பட வேண்டும் என்று அன்றைய கூட்டத்தில் முதல் குரல் கொடுத்தது நான் தான்! நான்தான்! அதை எதிர்த்துக் காரசாரமாகப் பேசியது துணைப்பிரதமர் மொரார்ஜி தேசாய்தான்! பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், அந்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்றிருந்த போதிலும் அவர்கள் சார்பாகக் கருத்துக்