பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 108 கூறிய மொரார்ஜி தேசாய், வங்கிகளை தேசீயமயமாக்குவது சாத்தியமற்றது என்று கூறினார். "வங்கிகளைத் தேசீயமயமாக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் சொர்க்கத் தையே இங்கே கொண்டு வந்துவிடலாம் என நினைப்பது தவறு" என்று கேலி பேசினார் அவர்! அந்தக் கூட்டத்தையொட்டி நடைபெற்ற முதலமைச்சர் கள் மட்டுமே கொண்ட மற்றொரு கூட்டத்தில் நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் பற்றித் தமிழக அரசின் சார்பில் நான் எடுத்து வைத்த எண்ணத்தில் சில துளிகள்:- "நமது முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களும், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தில் பெருத்த இந்த நிலையில் மிகக் மாறுதல் எதையும் விளைவிக்கவில்லை. கட்டுத்திட்டங்களுக்குள் நமது நான்காவது வேண்டியவர்களாசு குறுகலான ஐந்தாண்டுத் திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். நாலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்குரிய சில ஆக்கப்பணிகளை நிறைவேற்ற அத்தகைய ஆக்கப்பணிகளால் பலன் அடையக்கூடிய மக்களிடமிருந்து நன்கொடை திரட்ட வேண்டுமென அமைச்சர் வி.கே.ஆர்.வி. ராவ் தெரிவித்துள்ள கருத்தை என்னால் ஒப்புக்கொள்ள இயலாது!தற்சமயம், மாநில அரசு செய்யும் அலுவல்களையே மத்திய அரசு மறுபடியும் மேற் கொள்ளும் நிலை இருந்து வருகிறது. மாநிலங்களிலும், மத்தியிலும் நடைபெறுகின்றன. தடவைகள் அலுவல் இரண்டு எடுத்துக்காட்டாகத் தமிழ்நாட்டில் பற்றாக்குறை குறித்து, தமிழ் நாடு அரசாங்கம் மத்திய அரசுக்கு சில புள்ளி விவரங்களை அளிக்கிறது. ஆனால் மத்திய அரசு, அந்தப் புள்ளி விவரங்களை நம்பாமல் தனது அதிகாரிகளை அனுப்பி புள்ளி விவரங்களைச் இது மத்திய அரசு, மாநில சேகரிக்குமாறு உத்திரவிடுகிறது. நடந்து கொள் ஒரே அரசுகளிடம் முற்றிலும் நம்பிக்கை இல்லாமல் வதையே குறிக்கிறது." டெல்லியில் தேசீய வளர்ச்சி மன்றத்தில் நான் பேசியது பற்றி 20-4-69 தேதியிட்ட 'இந்து' ஏடு பின்வருமாறு குறிப் பிட்டது. மக்களின் "உண்மையான திட்டமாகும் வகையில், செய்யப்பட நான்காவது ஐந்தாண்டுத் திட்டம் மறுவரைவு வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் தேசீய வளர்ச்சி மன்றத்தில் வலியுறுத்தினார். நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை மறுவரைவு செய்ய வேண்டுமென்ற தமிழக முதல்