பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பெருந்தகையாளர்கள் 1964- ஆம் ஆண்டுக்குப் பிறகு நகராட்சி மன்றத் தேர்தல்கள் தமிழகத்தில் நடத்தப்படவில்லை. நான் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றவுடன் அந்தத் தேர்தல்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. 1969 ஏப்ரல் திங்கள் 24- ஆம் நாளும் 29-ம் நாளும் நகர் மன்றத் தேர்தல்களை நடத்தத் தேதிகள் குறிக்கப்பட்டன. குறிக்கப்பட்டன. அப்போதி ருந்த நகர் மன்றங்களின் மொத்த எண்ணிக்கை 84. அவற்றில் திருவண்ணாமலை, வாணியம்பாடி, கோவை. திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, மாயவரம், நாகப்பட்டினம், அருப்புக்கோட்டை, குளச்சல் ஆகிய 11 நகர் குளச்சல் ஆகிய 11 நகர் மன்றங்களில் வார்டுகள் பிரிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை முடிவடையாமல் இருந்ததால் எஞ்சியிருந்த 73 நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஏறத்தாழ இருபத்து ஐந்து லட்சம் பாக்காளர்களைக் கொண்ட 73 நகராட்சிகளிலும் போட்டி ிகக் கடுமையாக இருந்தது. 1967-ல் காங்கிரஸ் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பெருந் தோல்வி ஏற்பட்டு அதன்பிறகு அதன்பிறகு நடைபெறும் நகராட்சித் தேர்தல்கள் என்பதால் காங்கிரஸ் கட்சி, தனது தோல்வியைச் ரிக்கட்ட வேண்டுமென்ற எண்ணத்தோடு மிகத் தீவிரமாகப் பணியாற்றியது. நகரங்களில் உள்ள காங்கிரஸ் பெருந்தனத் பாரர்கள் பணத்தை வாரியிறைத்து எப்படியும் நகராட்சிக் லைவர்களாக வந்துவிட வேண்டுமென்று துடியாய்த் துடித்தனர், எப்படியும் வெற்றி பெற்றே தீரவேண்டுமென்று வெறி யேறிய நிலையில் கழகக் கூட்டணித் தொண்டர்களைக் காங்கிரசார் பல இடங்களில் தாக்கினர். தூத்துக்குடியில் காங்கிரஸ்காரர்களால் நாராயணன் என்ற கழகத் தொண்டர் உத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். தென் பாண்டி மண்டிலத்தில் கழகத்திற்காக ரத்தம் இந்திய தொண்டர்களையும், உயிர் விட்ட தியாகிகளையும் அதிக கொண்ட நகரம் தூத்துக்குடி! அங்கேதான் மாவீரன் கே.வி.கே. சாமியும், தாளமுத்துவும், எதிரிகளால்