பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 113 "காமராஜர், சி. சுப்பிரமணியம் போன்ற காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. ஆட்சியை எதிர்த்து உங்கள் தீர்ப்பை வழங்குங்கள் என்று நகர்ப்புற வாக்காளர்களைக் கேட்டனர். அரசின் மீதுள்ள நம்பிக்கையைப் புதுப்பிக்குமாறு தி.மு.க. தலைவர்களும் மக்களைக் கோரினர். ஆனால் மக்கள் அளித்த தீர்ப்பு, காங்கிரசுக்கு மற்றொரு அதிர்ச்சி வைத்தியமாக வந்து வாய்த்துள்ளது. அண்ணா மறைவுக்குப் பின் தி. மு. க. சிதைந்து விடும் என்று சிலர் கூறிய ஜோதிடம் பொய்த்து விட்டதையே இந்தத் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றனர்." எக்ஸ்பிரஸ் தவிர, வேறு சில ஆங்கில ஏடுகள் என்ன எழுதின என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். "கடந்த இரண்டு ஆண்டுக் கால அளவில் தி. மு. க. தனது நிலையில் அதிக வளர்ச்சியை அடைந்து விட்டது என்பதையே தமிழக நகராட்சித் தேர்தல் முடிவுகள் தீர்க்கமாக மெய்ப்பித்துக் காட்டுகின்றன. இதுவரை தமிழகத்தில் 40 நகராட்சிகளைக் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்தோடு நிர்வாகம் செய்து வந்தது. இப்போது காங்கிரசுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்திருப்பது ஆறு நகராட்சிகளில் மட்டுமே! இதுவரை எட்டு நகராட்சிகளில் மட்டுமே பெரும்பான்மை பெற்றிருந்த தி.மு. கழகம் இப்போது தனது தோழமைக் கட்சிகளுடன் ஐம்பது நகராட்சிகளில் பெரும் பான்மை பெற்றுள்ளது. திசை திரும்பிய காலக் காற்று, தெளிவாகவே வீசுகிறது. தி.மு.கழகத்திற்கு ஆளும் திறமையில்லையென்று காங்கிரசார் இடைவிடாது செய்து வந்த பிரச்சாரத்தை மக்கள் மதிக்கவில்லை என்பது தெளிவாகிவிட்டது." (29.4-69 மெயில் தலையங்கம்) "தமிழ்நாட்டில் நடைபெற்ற நகராட்சித் தேர்தல்கள் முடிவு குறித்துத் தமிழக முதலமைச்சர் கருணாநிதி, திருப்தி தெரிவித்துள் ளார். அந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் பெறுவதற்கு அவர் எல்லா வகையிலும், நியாயமாகத் தகுதியானவரேயாகும்." (GLLQLD GT-30-4-69) "தமிழகத்தில் அண்மையில் நடந்தேறிய நகராட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து தி. மு. கழகம், மன நிறைவு கொள்ள Re