பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114நெஞ்சுக்கு நீதி எல்லா நியாயமும் உண்டு. அரசியலில் தி. மு. கழகத்தின் மீட்புத் தன்மைக்கு நகராட்சித் தேர்தல் முடிவுகள் ஒரு அளவு கோலாகும். காங்கிரஸ் கட்சி, அது இழந்த இடத்தைப் பிடிப்பதற்கு இன்னும் வெகு நீண்ட காலத்துக்கு வெகு கடினமாக உழைத்தாகவேண் டும்." (இந்துஸ்தான் டைம்ஸ்-1-5-69) நகராட்சித் தேர்தல்களில் தொடர்ந்து பிரச்சாரப் பணியில் ஈடுபட்ட காரணத்தால் என் உடல் நலம் சிறிது கெட்டு, சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியவனானேன். உடல் நலிவு ஏற்படுவதும் அதைப் பொருட்படுத்தாமல் ஊர் சுற்றி அலைவதும் அப்படி ஊர் சுற்றி மக்களைச் சந்திப்பதாலேயே உடல் நிலை சீரா வதும் எனக்கு வாடிக்கைதான்! பெரியார் அவர்களின் பள்ளியில் சரியாகப் பயிற்சி பெற்ற வர்கள் அப்படித்தான் தங்கள் உடல்நலத்தைப் பற்றிக் கணக் கிட்டு வைத்திருப்பார்கள். சென்னையில் எனது பிறந்த நாள் விழா வொன்றினை அண்ணாவைக் கொண்டு கழக நண்பர்கள் நடத்தி னார்கள். அப்போது அதில் நான் கலந்துகொள்ளாமல் மன்னார் குடிக்குச் சென்று நண்பர் மன்னை வீட்டில் தங்கிவிட்டேன். சென்னை விழாவில் பேசிய அண்ணா அவர்கள் "தம்பி கருணாநிதி பேசும்போது வியர்வை கொட்டும்-உடல்நிலை பாதிக் கப்பட்டு வாயில் மருந்து பொது சொட்டும்-இது அவனது வாழ்க்கை” என்று குறிப்பிட்டதைத்தான் எனக்கு நலிவு ஏற்படும் போதெல்லாம் நினைத்துக் கொள்வேன். 1969 மே திங்களில் இந்தியாவைப் பொறுத்தும், தமிழகத் தைப் பொறுத்தும் பெரும் துயரத்தை அளிக்கக்கூடிய இருவரின் மரணங்கள் ஏற்பட்டன. இந்தியத் துணைக் கண்டத்து அரசியலிலேயே ஒரு நூல் இழையில் பெரும் திருப்பத்தை விளைவித்த மிகப் பெரிய மாறுதல் ஏற்படுவதற்குக் காரணமானதாக இந்தியக் குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் அவர்களின் மறைவு அமைந்து விட்டது என்றே கூறலாம். மே திங்கள் மூன்றாம் நாளன்று இருதய நோயின் காரண மாகத் திடீரென்று ஜாகிர் உசேன் காலமானார். கல்வித் துறையில் பெருங் கவனம் செலுத்திய பெருமகனார் அவர்! சாந்தமும், அன்பும், எளிமையும் கொண்ட கற்றறி மேதையாகத் திகழ்ந் தவர். புகழ்பெற்ற ஜாமியாமிலியா பல்கலைக்கழகத்தீன் துணை