பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 117 ☐ யிலேயே இருந்து கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். அதனால்தான், நான் டெல்லிக்குச் செல்ல இயலாமல் மதி அவர்களை அனுப்பிவைக்க நேரிட்டது. மறைந்த மேதை குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் அவர்களை நினைக்கும்போது, அவர் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் (3-1-68) ஆற்றிய தொடக்க உரையை மறக்க இயலாது: "நம்முடைய மொழிகளிடையே தமிழ் மாண்புமிக்கதொரு இடத்தை வகிக்கிறது. நம்முடைய நாட்டிற்கும் வெளியே அது பேசப்படுவதால், தமிழ் ஒர் அனைத்து நாட்டு மொழியாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லைகள் பழமையானவை. நில எல்லை களையும், கலாசார எல்லைகளையும் தாண்டிச் செல்கின்ற ஒரு பண்பாட்டையும் பெற்றிருந்தது. தமிழ் உணர்ச்சி இருந்த இட மெல்லாம் தமிழ்நாடு பரவியிருந்தது. வடக்கில் இமயத்தையும், கிழக்கிலும் மேற்கிலும் திரைகடல்களையும் அந்தக் கடல்களுக்கு அப்பால் உள்ள நிலங்களையும் அது கண்டது. தமிழர்கள் அரேபியா, எகிப்து, ரோமாபுரி ஆகியவற்று டன் வர்த்தகம் நடத்தினார்கள். வளமைமிக்க வர்த்தகச் சங்கங் களின் பெயர்கள் உலகம் முழுவதும் வியாபித்திருந்தன. மதிப்பரிய வர்த்தகப் பண்டங்களுடன் கப்பல்கள் தங்கிய பல்லவர்களின் மாமல்லபுர துறைமுகத்தைப் பற்றிய வர்ணனை ஆழ்வார்களின் பாடல்களில் காணப்படுகின்றது. தமிழ்நாட்டிற்கும், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையே செழிப்பான வர்த்தகம் நடைபெற்றது பற்றி சுமத்ரா வில் கண்டெடுக்கப்பட்ட 11-வது நூற்றாண்டு தமிழ்க் கல் வெட்டுக்களிலிருந்து தெரிகிறது. தமிழ் மன்னர்களின் கடற்படை இந்துமகா சமுத்திரத்தை ஆண்டு வந்தது. புகழ்மிக்க கடற்படையைப் பெற்றிருந்த ராஜேந்திர சோழன், சீனப் பேரரசுடன் ராஜீய வர்த்தகத் தொடர்பு கொண்டிருந்தான். மேல் திசை நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு கொள்வ தற்காக,பல நூற்றாண்டுகளுக்கு முன் பாண்டிய மன்னன்