பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நெஞ்சுக்கு நீதி ஒருவன், அகஸ்தஸ் என்னும் ரோமாபுரி பேரரசருக்கு தூதுவர் ஒருவரை அனுப்பியிருக்கிறான். ஆனால், அதே சமயத்தில் கற்புத் தெய்வத்திற்கு ஒரு கோவில் கட்டுவதற்காக சேரமன்னன் ஒருவன் இமய மலை யிலிருந்து கல் கொணர்ந்து, கங்கையில் நீராட்டி அத் தெய்வத் திற்குச் சிலை அமைத்த வரலாற்றையும் நாம் அறிவோம். தமிழ் மொழி பண்பாட்டைப் பற்றி இங்கு குழுமியுள்ள பேரறிஞர்களை விட அதிகமாக நான் கூற முடியாது. எல்லோருக்கும் தெரிந்தவற்றை நாம் மீண்டும் கூறினால் அது ஒரு மாபெரும் மரபிற்குச் செலுத்தும் அஞ்சலிதான். இந்த மரபு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பழமை யான இலக்கிய அளவு எனக் கருதப்படும் சங்க இலக்கியத் திலிருந்து ஆரம்பமாகிறது. செழித்த, பண்பட்ட இந்த இலக்கியம் பல நூற்றாண்டு களாய் ஏற்பட்ட வளர்ச்சியைக் காட்டுகிறது. உலக அறிவின் புனிதக் களஞ்சியமாக விளங்குகிறது குறள். வால்மீகியின் கதையை அடிப்படையாகக் கொண்ட கம்பராமாயணம் ஒரு மாபெரும் காவியமாகும். உலகில் மிகவும் புகழ்பெற்ற இலக்கியப் படைப்புக்களில் ஒன்றாக இது திகழ்கிறது. செழிப்புற்று பட்டியலில் அதேபோன்று தற்கால இலக்கியமும் விளங்குகிறது. கவிஞர்கள் கதாசிரியர்களின் சுப்பிரமணிய பாரதியார் பெயர் குறிப்பிடத்தக்கது. நமது நாட்டு விடுதலைப் போராட்ட கவியான கவியான அவர் அவர் புதியதொரு சுதந்திர சகாப்தத்தை முன்னரே அறிவிக்கக் கூடிய தீர்க்கதரிசனத்தைப் பெற்றிருந்தார். தமிழ் மரபு பழமையானது மட்டுமின்றி பரந்த உணர்வை யும் பெற்றிருந்தது. தமிழ் மரபு எல்லா வகைகளிலும் சிறப் புற்று இருப்பதால் அதில் எந்த அம்சம் அதிகச் சிறப்பு வாய்ந்தது என்பதைக் கூறுவது கடினம். வடமொழிக்கு பாணினி செய்துள்ளதைப் போன்று, தமிழுக்கும் தொல்காப்பிய ஆசிரியர் திடமான விஞ்ஞான ரீதியில் இலக்கண அடித்தளத்தை அமைத்திருக்கிறார். ஸ்தாபனங்களைத் தோற்றுவிப்பதில் தமிழர்கள் ஒரு தனித் திறனைப் பெற்றிருக்கிறார்கள். சுகாதார அமைப்புகளைப்பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. உயர் கல்விக்கான பல பள்ளி