பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 125 பி இதைக் கூறிக்கொண்டே அவர் அழுதார். சுற்றி நின்ற நாங்களும் கண்ணீர் வடித்தோம். 18-5-69 பிற்பகல் மூன்றரை மணி அளவில் ஏ. ஜி. மறைந்து விட்டார். ஏ.ஜி. அவர்களின் குடும்பத்திற்கு நிதி திரட்டித் தருகின்ற முயற்சி உடனடியாகத் தொடங்கப்படுமென நான் அறிவித்து, அவ்வாறே ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகை நிதியாக அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. அவர் இறுதி மூச்சு விடுவதற்கு முன்பு தெரிவித்தவாறு அவரது மகள்களின் திருமணத்தையும் கழகமே முன்னின்று நடத்தி வைத்தது. அவர் விரும்பியதையெல்லாம் அவரது குடும்பத்தைப் பொறுத்தவரையில் என்னாலியன்ற வரையில் செய்து முடித்தேன். ஆனால் அவர் மரணப்படுக்கையில் என்னை எச்சரித்து ஒன்றைச் சொன்னாரே; அதை மட்டும் நான் அலட்சியப்படுத்தி விட்டேன்! என்ன இருந்தாலும் அனுபவபூர்வமாக அனுபவபூர்வமாக உணர்ந்து அவர் சொன்ன கருத்தை நான் ஏற்காமல் போனதின் விளைவைப் பிறகு புரிந்துகொண்டேன். ஆனால் ஒன்று; ஏ.ஜி. அவர்கள் குறிப்பிட்ட அந்த நண்பரை அமைச்சரவையில் நான் அமர்த்தி யதால் மட்டுமல்ல; அவரையொத்த வேறு சில நண்பர்களையும் அமைச்சரவையில் இடம் பெறச் செய்து சோதனையான காலத் தில் எவ்வளவு வேதனைக்கு ஆளானேன் என்பதெல்லாம் நாடறிந்த உண்மைகள் அல்லவா?