பக்கம்:நெஞ்சுக்கு நீதி 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுக்கு நீதி 129 அழைத்து ரெயில்- நிறுத்தப் ஏ.எஸ். கே. போன்றவர்களை போராட்டம் சம்பந்தமாகப் பேச்சு வார்த்தை நடத்தியிருக் கிறேன். அவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்து வதாக உறுதி கூறியிருக்கிறார்கள். அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக் கப்படும்" என்று கூறினேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தபடி சென்னை மாநகரிலும் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் நடைபெற்ற ரெயில் நிறுத்தப் போராட்டத்தில் 150 பேர் கைது செய்யப் பட்டார்கள். அவர்களையெல்லாம் அன்று இரவே விடுதலை செய்யும்படி உத்தரவிடப்பட்டது. சென்னையிலே ஏ. எஸ். கே. அவர்களும், மதுரையிலே கே. டி. கே. தங்கமணி அவர்களும், கோவையிலே பாலதண்டாயுதம் அவர்களும் அந்தப் போராட்டத்திலே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப் பட்டார்கள். மாநில உரிமைகளுக்காக மத்திய அரசை வலியுறுத்துகின்ற ஒரு போராட்டத்தில் ஈடுபடுபவர்களிடம் கழக அரசு எத்தகைய அணுகு முறையைக் கையாண்டது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட நான்காவது மாதத் திலேயே ஒரு இடைத்தேர்தலையும் சந்திக்க நேரிட்டது. 1967-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியிலிருந்து கூட்டணியின் சார்பாக சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் வெற்றி பெற்றிருந்தார். அவர் திடீ ரென்று காலமானதால் 1969-ஆம் ஆண்டு மே மாதம் 30-ந் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தொகுதி கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுக்கப் பட்ட தொகுதி என்ற அடிப்படையில் அந்த இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சிக்கே விட்டுக்கொடுக்கப்பட்டு, பாலசுப்ரமணியம் அவர்களின் சகோதரர் சண்முகசுந்தரம், சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். அவரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் கே. பி. முத்துசாமி யிட்டார். எதிர்த்து போட்டி